Thursday, August 9, 2012

பொதுமக்களே! மாணவர்களே! சிந்திப்பீர்!

  • பக்தியுள்ள மாணவன் படிக்காமல், பரிட்சை எழுதாமல் பாசாவானா?
  • அம்மன் சிலையை ஆண் பூசாரி குளிப்பாட்டலாமா?
  • அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது, எல்லாம் அவன் செயல் என்றால் ? சுனாமி, திருடு, வழிப்பறி, கொலை, கற்பழிப்பு, விபத்து எல்லாம் எவன் செயல்?
  • சர்வசக்தி உள்ள சாமிக்கு, கதவும், பூட்டும், சாவியும் ஏன்?
  • உலகை படைத்தது கடவுள் என்றால் கடவுளை படைத்தது யார்?


சாதி பேதமற்ற, ஏற்ற தாழ்வு இல்லாத சமுதாயம் படைப்போம்!
மாணவர்களே!  பொதுமக்களே!  சிந்திப்பீர்!
திராவிடர் கழகத்தில் இணைந்திடுவீர்!

**********************************

(உருவாக்கம் : கு.நீலகண்டன், தி.க. மாணவரணி, சித்தாத்திக்காடு கிளைக்கழகம் பேராவூரணி நகரம்)

வெளியீடு: ஒன்றிய,  நகர திராவிடர் கழகம், பேராவூரணி-சேதுபாவாசத்திரம்.

34 comments:

  1. \\பொதுமக்களே! மாணவர்களே! சிந்திப்பீர்!\\ அதென்னது மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு அழைப்பு? அவன் பொது மக்களில் அடக்கம் இல்லையா? அல்லது பொது மக்களில், பெண்கள், முதியவர்கள், நடுத்தர வயதுடையவர்கள் என்று இருக்கும் போது மாணவர்களுக்கு மட்டும் தனி அழைப்பு ஏன்? என்னா, அவன்கிட்ட ஆற்றல் இருக்கு, குடும்ப பொறுப்பு கிடையாது, கூப்பிட்ட இடத்து எப்போ வேணுமினாலும் வருவான், போஸ்டர் ஒட்டுவான், மற்ற எடுபிடி வேலைகளை நேரங் காலம் பார்க்காமல் செய்வான், அவனை வச்சு நீங்க கழகம் வளர்ப்பீங்க , கடைசியா தி.க. வுக்கு வீரமணி மகன் தான் அடுத்த தலைவரா வருவான், அவனுக்கு இந்த மாணவர்கள் கடைசி வரைக்கும் கழக போஸ்டர் தான் ஓட்டிகிட்டு இருக்கணும்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு பாப்பான்தான் சங்கராச்சாரியா தொடர்ந்து வந்துக்கிட்டு இருக்கான்... அதைப் பற்றியெல்லாம் கேட்க மாட்டேங்கிறீங்க....

      Delete
    2. உலகத்தின் மிகப்பழமையான இரண்டு சுரண்டல் தொழில்களான மதம், அரசியல் என்ற இரண்டிலும் சுரண்டல் தளபதிகளான மதவாதிகளும் அரசியல் வாதிகளும் இளைஞர்களுக்கு வலைவிரித்து பசப்பு மொழிகளால் பாச வார்த்தைகளால் பொய்யை அதிகாரப்பூர்வமாக பரப்பி மனித சமூகத்தை பாழ்படுத்தி வரும் இவ்விரண்டு தொழிகளும் சில மகத்தான பொய்யர்களை தலைவர்களாகப் பெற்று இன்று இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கின்றனர்.

      கொடிதூக்கு, கொள்கைப் பரப்பு, என்னைத் தலைவனாக்கு கிறித்தவனை அழி, முஸ்லீமை வெட்டு என்னை மடாதிப்பதியாக்கு ஜகத்குருவாக்கு என்று சொலிறார்கள். சக மனிதர்களைக் கொன்று குவித்து அந்த பிண மேடையில் இவர்கள் கோலோச்ச இளைஞர்கள் தோள் கொடுக்க துணைநிற்க, போராட கொள்கைப் பரப்ப வேண்டுமாம்,

      நீங்கள் சிந்தியுங்கள் என்று எவன் சொல்லவில்லையோ அவன் அயோக்கியன்.

      அறிவுக்கு பணிய்யாற்றுங்கள் என்று எவன் வாதிடவில்லையோ அவன் திருடன்.

      மனித இன மேம்பாட்டிற்கு பாடுபடுங்கள் என்று எவன் அழைக்கவில்லையோ அவன் துரோகி.

      இளமை துடிப்பை செயல் வேகத்தை மதவாதியின் காலடியில் சமர்பிப்பதைவிட, அரசியல் வாதியின் பித்தலாட்டங்களுக்கு பலியிடுவதைவிட அறிவு பணிக்கு அற்பணிக்க வாருங்கள்.



      தோழர்களே இளைஞர்களே, புரட்சிகர மாணவர்களே....என்று நாங்கள் அழைக்காமல் சாந்தி செய், சடங்கு செய், யாத்திரை செய் , பூஜை செய், பிரார்த்தனை செய், பார்ப்பானுக்கு தானம் செய் என்று பார்ப்பன பண்டார பரதேசி நாய்களா இதைச் செய்யும்.

      Delete
    3. \\தோழர்களே இளைஞர்களே, புரட்சிகர மாணவர்களே.... \\ அழைப்பவர் எல்லோரையும் அழைக்கலாமே, அதென்னது மாணவர்களை மட்டும் அழைப்பது?

      இளமை துடிப்பை செயல் வேகத்தை மதவாதியின் காலடியில் சமர்பிப்பதைவிட, அரசியல் வாதியின் பித்தலாட்டங்களுக்கு பலியிடுவதைவிட *****நாங்க சொத்து சேர்க்க உங்களை அற்பணிக்க**** வாருங்கள்.

      அடப் பாவிங்களா. ...... யாரும் சனங்களுக்கு நல்லது பண்ண மாட்டீங்களாடா......??

      Delete
    4. \\ஒரு பாப்பான்தான் சங்கராச்சாரியா தொடர்ந்து வந்துக்கிட்டு இருக்கான்... அதைப் பற்றியெல்லாம் கேட்க மாட்டேங்கிறீங்க...\\ தவறுகளை திருத்தி சமுதாய மாற்றத்திற்கான வழிமுறைகளை எற்ப்படுத்தாமல் , நீங்களும் இன்னொரு சங்கர மடத்தை எதற்கு திறக்க வேண்டும்? சங்கர மடம் தான் ஏற்கனவே இருக்கே, அவங்க செய்ததையே செய்வதற்கு நீங்கள் எதற்கு?

      Delete
    5. யோவ் பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா கொட்டைப்பாக்குக்கு விலை சொல்லிக்கிட்டு இருக்கே...

      Delete
    6. இருக்குற சங்கர மடத்தில் இப்பொழுது இருக்கும் திருட்டுப்பய இறந்த பிறகு ஒரு தாழ்த்தப்பட்ட பார்ப்பனரல்லாத ஒருவர் சங்கரச்சாரியா வரமுடியுமா?

      Delete
    7. \\யோவ் பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா கொட்டைப்பாக்குக்கு விலை சொல்லிக்கிட்டு இருக்கே...\\ இந்த மாதிரி நானும் எழுத ஆரம்பித்தால் இந்த பிளாக் நாறிடும். நாகரீகம் காக்கவும்.

      Delete
    8. சமூகத்தை சீர்திருத்த நினைப்பவர்கள் எதற்காக சங்கரர் மடத்தை முன்னுதாரணமாகக் காட்ட வேண்டும் என்பது தான் கேள்வி. ஜனநாயக முறையில் உங்கள் கட்சியின் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியாத நீங்கள் அவர்களைக் குறை சொல்ல அருகைதை இருக்கிறதா? சங்கர மடத்தில் கூட அடுத்த சங்கராச்சாரியாக வருபவன் மகனாக இருக்க மாட்டானே?

      \\இருக்குற சங்கர மடத்தில் இப்பொழுது இருக்கும் திருட்டுப்பய இறந்த பிறகு ஒரு தாழ்த்தப்பட்ட பார்ப்பனரல்லாத ஒருவர் சங்கரச்சாரியா வரமுடியுமா?
      \\
      உமது கொள்கையைப் பற்றியே உமக்குத் தெரியாதா? அந்த மடமே தேவையற்றது என்று சொல்வீர்களா, அல்லது அவனை இவனை மடாதிபதியாக்கி மூட நம்பிக்கையை தலைத்தோங்கச் செய்வீர்களா?

      Delete
  2. \\பக்தியுள்ள மாணவன் படிக்காமல், பரிட்சை எழுதாமல் பாசாவானா?\\ ஒருத்தன் பரிட்சையில் பாசாவதர்க்கும் பக்திக்கும் என்ன சம்பந்தம்? அடுத்து சாப்பிடாமலேயே சாப்பாடு வயித்துக்குள்ள போகுமா? இதெல்லாம் ஒரு கேள்வியா பகுத்தறிவு சிங்கங்களே?

    ReplyDelete
    Replies
    1. பக்தியுள்ள மாணவன் பக்தியை மட்டும் வைத்துக்கொண்டு படிக்காமல் தேர்வில் தேர்ச்சி பெற முடியாது, ஆனால் பக்தியில்லாமல் படித்தால் நிச்சயம் தேர்வில் தேர்ச்சிப் பெறுவான்.. எத்தைனேயோ மாணவர்கள் இந்துமதக் கடவுள்களை கோவில்களில் சென்று வணங்கிவிட்டுத்தான் தேர்வு எழுத செல்கின்றனர். அவர்களில் அத்தனைப் பேரும் தேர்ச்சிப் பெறுவதில்லை.... இதற்கு பக்தியாக இருந்ததில் கவனம் செலுத்த வில்லையா... இல்லை படிப்பில் கவனம் செலுத்த வில்லையா?

      Delete
    2. கீதையில் வெட்டியாக இரு என்று கண்ணன் அர்ஜுனனுக்குச் சொல்லவில்லையே. சொல்லப் போனால், கடமையைச் செய்யாமல் விலக இருந்த அர்ஜுனனை தடுத்து போரிடச் சொல்லித் தானே சொல்கிறார்? மாணவன் என்றால் நன்றாகப் படிக்க வேண்டும், அதிலிருந்து அவன் தவறக்கூடாது என்பதைத் தானே இதிலிருந்து விளங்கிக் கொள்ள வேண்டும்? நன்றாகப் படித்து, கூடவே கோவிலுக்கும் சென்றால் தவறென்ன?

      Delete
    3. \\கீதையா ... செல்லாது செல்லாது......\\ உங்களுக்குச் செல்லாது, ஆனால் கோவிலுக்குச் சென்ற மாணவனுக்குச் செல்லுமே!!

      Delete
  3. \\அம்மன் சிலையை ஆண் பூசாரி குளிப்பாட்டலாமா?\\ உங்க தாயார் நோய் வாய்ப் பட்டிருக்கிறார்கள்,குளிப்பது உட்படதன்னால் எதுவும் செய்துகொள்ள முடியாது , வீட்டில் அவர்களைக் கவனித்துக் கொள்ள யாரும் இல்லை என்னும் நிலையில் நீர் அவர்களுக்கு குளிப்பாட்டுவீரா?

    ReplyDelete
    Replies
    1. அப்படியென்றால் உங்கள் அம்மனுக்கு குளிக்கத் தெரியாதா.... ஓ உடம்பு சரியில்லாமல் இருக்கும்.... குளிப்பது உட்பட எதுவும் தன்னால் செய்துக்கொள்ள முடியாது.. அதனால் தானே...

      Delete
    2. அம்மன் என்பது பெண் தெய்வம்தானே.. பிறகு ஏன் மாத விலக்கு உள்ள பெண்களை கோவில்லுக்குள் அனுமதிக்க மாட்டேன் என்கிறார்கள் .. சென்றால் தீட்டாகி விடும் என்பது தானே....
      அப்படியென்றால் உங்கள் அம்மன் பெண் தெய்வம் தானே மாதவிலக்கு வராதா?
      அந்த நேரங்களில் கோவிலை விட்டு வெளியில் சென்று தங்கியிருக்குமா?

      Delete
    3. மாத விலக்கான பெண்களுக்கு ஓய்வு தேவை, அதனால் தான் வீட்டிற்குள்ளேயே நுழைய வேண்டாம் என்று சொன்னார்கள். மேலும் அந்த நிலையில் அவர்களால் திறம்பட எதிலும் செயல்பட முடியாது, கோவிலுக்கு போவது கூட.

      Delete
    4. மாதவிலக்கு காலங்களில் பெண்கள் கோவில்களுக்கு வரவேண்டாம் என்று இந்து மதம் கூறவில்லை... வந்தால் தீட்டு என்றல்லவா கூறுகிறது.. ஆபாசமும், பெண்களை இழிவும் படுத்தும் மதம் இந்துமதம்..

      Delete
  4. \\அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது, எல்லாம் அவன் செயல் என்றால் ? சுனாமி, திருடு, வழிப்பறி, கொலை, கற்பழிப்பு, விபத்து எல்லாம் எவன் செயல்?\\ கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டால் சுனாமி நின்று விடுமா? முன்னால் முதல்வர் நாத்தீகர்தானே, அவரது ஆட்சியில் கொலை, கற்பழிப்பு, விபத்து எல்லாம் நடக்கவே இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. /// கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டால் சுனாமி நின்று விடுமா?/// கடவுள் இருக்குனு சொன்னால் சுனாமி நின்று விடுமா? சர்வசக்தி உள்ள கடவுள் தடுத்து நிறுத்த வேண்டியதுதானே....

      Delete
    2. சுனாமி வருகிறது என்பதற்காக கடவுள் இல்லை என்ற கருத்தை முன் வைக்கிறீர்கள். அந்தக் கருத்தை ஏற்பதன் மூலம் சுனாமி பிரச்சினை தீர்த்தல் பரவாயில்லையே, ஆனால் அவ்வாறு இல்லையே? அப்புறம் உங்க கொள்கையை ஏற்று என்னத்துக்கு ஆகப் போவுது, அதுக்கு பேசாம சுனாமி வரும் கஷ்டத்தை தாங்கிக் கொள்ள கடவுள் கிட்ட வேண்டிகிட்டு மன ஆறுதலாச்சும் அடையுறேமே, அதிலயும் மண்ணை வாரிப் போடப் போறீங்களா?

      Delete
  5. \\சர்வசக்தி உள்ள சாமிக்கு, கதவும், பூட்டும், சாவியும் ஏன்?\\ சர்சக்தி சாமிக்கு இருப்பதால் அவருக்கு ஒரு பக்தன் எப்படித்தான் சேவை சாதிப்பான்? அவனுக்கு ஏதாவது வேலை தரவேண்டுமல்லாவா? ஏன் கோவிலைப் பார்த்துக்கொள் என்ற வாய்ப்பை தருகிறார், என்னதான் பூட்டும் சாவியும் போட்டாலும் கோவிலை மட்டுமல்ல தன்னையும் சேர்த்து பார்த்துக் கொள்வது இறைவன்தான் என்பது பக்தனுக்கு நன்றாகவே தெரியும்!!

    ReplyDelete
    Replies
    1. ////கோவிலை மட்டுமல்ல தன்னையும் சேர்த்து பார்த்துக் கொள்வது இறைவன்தான் என்பது பக்தனுக்கு நன்றாகவே தெரியும்!!//// அப்படியென்றால் சாமி சிலைகள் திருடப்படும்போது.... அந்த கோவில் குருக்கள் கிட்டையாவது தகவல் தெரிவிக்கமல்லவா..... அப்பொழுது மட்டும் ஏன் சாமி தன்னை காப்பாற்றிக்கொள்வதில்லை...

      Delete
  6. \\உலகை படைத்தது கடவுள் என்றால் கடவுளை படைத்தது யார்?\\ வண்டியைக் குதிரை இழுக்கிறது என்றால் குதிரையை இழுப்பது யார்? இது புத்திசாலித் தனமான கேள்வியா?

    ReplyDelete
    Replies
    1. குதிரையை யாரும் இழுக்க மாட்டாங்க.... குதிரைத் தன் சக்தியால் விசையினைக் கொடுத்து வண்டியை இழுக்கும்..... சரி கடவுள் எப்படி தோன்றினார் அதைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் கூறவும்.... நாங்களும் தெரிந்துக்கொள்கிறோம்..

      Delete
    2. முதலில் கடவுள் என்னும் பதத்திற்கு அர்த்தத்தை எங்கேயாவது தேடித் பிடிச்சு தெரிஞ்சுக்குங்க. எல்லாத்துக்கும் மூலம் தான் கடவுள், அவரை இன்னொருத்தர் படைக்கணும்னா அவரு கடவுளே இல்லை. குதிரை தன்னையும் இழுக்கும் வண்டியையும் இழுக்கும்,நீங்க சொன்ன மாதிரி குதியை யாரும் இழுக்க வேண்டியதில்லை, இறைவனை யாரும் படைக்க வேண்டியதில்லை, அவர் எப்போதும் இருக்கிறவர்.

      Delete

  7. \\சாதி பேதமற்ற, ஏற்ற தாழ்வு இல்லாத சமுதாயம் படைப்போம்!
    மாணவர்களே! பொதுமக்களே! சிந்திப்பீர்!
    திராவிடர் கழகத்தில் இணைந்திடுவீர்!\\ வாங்க வந்து சேருங்க, ஆனாலும் வீரமணிக்கு உடம்பு சவுக்கியமில்லைன்னா அமேரிக்கா போயி வைத்தியம் பார்த்துக்குவாறு, ஆனா நீங்க டாகுடறு இல்லாத, மருந்து இல்லாத உள்ளூரு கவுர் மெண்டு ஆஸ்பத்திரியில தான் சாவனும். இது தான் பேதமற்ற சமுதாயம். அவருக்கப்புறம் அவர் மகன் தான் தி.க. தலைவராவாறு, இது தான் ஜனநாயகம். அவரு கார்ல போவாரு நீங்க சைக்கிள்ள கூட போக முடியாது, இது சமத்துவம்.

    ReplyDelete
    Replies
    1. வெளிநாடுகளில் வர்க்க பேதம் மட்டும்தான் உண்டு,... ஆகையால் இன்றைக்கு தொழிலாளியாக இருப்பவர் நாளை முதலாளியாக வர முடியும்... நிறைய வரலாறுகள் இருக்கிறது.......

      இங்கு வர்ணாசிரம முறை என்ற கொடுமையான முறை இங்கிருக்கிறது.... 10 கோடி ரூபாய் இருந்தாலும் பாப்பான் பாப்பான்தான்... 10 பைசா இருந்தாலும் பாப்பான் பாப்பான்தான்.... 10 கோடி ரூபாய் உள்ள ஒரு ஆதி திராவிடர் இங்கு பார்ப்பானாக ஆகிவிடமுடியாது... 10 பைசா உள்ள பாப்பான் இங்கு ஆதி திராவிடர் ஆகிவிடமுடியாது..... இந்த வர்ணாசிரம முறையைக் கூறிய பகவத் கீதை முட்டாளின் உளரல்.

      Delete
    2. வீரமணி எதுக்கு அமேரிக்கா போறார் என்ற கருத்தை விட்டு விட்டு அங்கே இருக்கும் நிலவரத்தை எதுக்குச் சொல்கிறீர்களோ தெரியவில்லை. சரி அதை இன்றைக்கு தி.க விலாவது நிறைவேற்றுங்களேன், இப்போது சாதாரணத் தொண்டன் அடுத்த தி.க தலைவனாக முடியுமா? முடியாது, என்னா பணம், அது அவர் மகனுக்கு வேணும், விட மாட்டாரு. அதுக்கு பல்லக்கு தூக்க உங்களைப் போன்ற, இனா.. வானாக்கள்........... கொடுமைடா சாமி.

      Delete
  8. நாத்தீகக் கண்மணிகளே, நீங்க எங்களை சிந்திக்க வச்சது இருக்கட்டும், முதலில் நீங்க என்னைக்காவது சிந்திச்சிருக்கீன்களா? திருவிளையாடல் நாகேஷ் மாதிரி உங்களுக்கு கேள்வி கேட்க மட்டும்தான் தெரியுமா? உங்களை சில கேள்விகள் கேட்டால் பதில் தர முடியுமா?

    1. சிலை வைத்து மாலை மரியாதை செய்பவன் முட்டாள், அச்செயல் காட்டுமிராண்டித் தனம் என்று சொல்லும் நீங்கள் எதற்காக ஊர் ஊருக்கு பல லட்சம் ரூபாய் செலவு செய்து பெரியாருக்கு சிலை வைத்து அதற்க்கு மாலை மரியாதை செய்கிறீர்கள்? இத்தனைக்கும் இது அவர் உயிரோடு இருந்தபோதே நடந்தது, ஒரு புறம் கல்லுக்கு மரியாதையா என்ற பிரச்சாரம், அதே சமயம் தன்னுடைய உருவத்தையே கல்லாகச் செதுக்கி ஊர் ஊருக்கு வைத்து அதற்க்கு மாலை மரியாதை. உசிரோடு இருக்கிறவனுக்கு மாலை போட்டால் அது மரியாதை, அவனோட சிலைக்கு மாலை போட்டால், அது அவனுக்கு செலுத்திய மரியாதையாகுமா? ஆத்தீகன் சிலைக்கு மாலை போட்டு வணங்குவதை கேலி செய்யும் நீங்கள் அதையே பெரியார் சிலைக்கு செய்வது ஏன்??

    உனக்கு ஏன்டா பூணுல், குடுமி என்ற அடையாளம், உனக்கு ஏன் லுங்கி, தொப்பி என்ற அடையாளம் என்று கேள்வி கேட்கும் நாத்தீகன் எதற்காக கறுப்புச் சட்டையைப் போட்டு தன்னை அடையாள படுத்த வேண்டும்? விஞ்ஞானப் பூர்வமாக அப்படி என்ன கருப்பு வண்ணத்தில் இருக்கிறது? சொல்லப் போனால் வெயிலுக்கு ஒவ்வாத வண்ணம் கருப்பு அல்லவா? நீ உன் கொள்கையைப் பரப்ப கருப்பு சட்டை போட்டால், இன்னொருத்தன் அவன் கொள்கையைப் பரப்ப குடுமி வைத்தால் என்ன தப்பு?

    செத்தவன் சமாதிக்கு வருஷா வருஷம் போய் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிரீர்களே, அங்கே செத்தவனின் எலும்புக் கூடு உங்கள் மரியாதையை ஏற்றுக் கொள்கிறதா? அங்கே மவுனமாக நிற்கிறீர்களே அப்போது அந்த எழும்புக் கூட்டுடன் மனதால் பேசுகிறீர்களா? இல்லை உன் பேரைச் சொல்லி இப்போ நாங்க கொள்ளையடிக்கிறோம், மக்களை ஓட்டாண்டிகளாக்கி நாங்க சவுக்கியமா இருக்கிறோம்னு சொல்றீங்களா?

    திருமணம் செய்வதே பெண்ணை ஒரு வேலைக்காரியாகவும், அடிமையாகவும் ஆக்கும் வேலை என்று சொன்ன பெரியார் எதற்காக மணியம்மையைத் திருமணம் செய்து ஒரு வேலைக்காரியாக்கினார்? [திருமணத்திற்கு முன்னரே அந்தமா இவருக்கு வேலைக்காரியாகத்தான் இருந்திருக்கிறார். பெண் சுதந்திரம் பற்றி பேசும் இவர் எதற்க்காகாக ஒரு பெண்ணை வேலைக்காரியாக வைத்திருந்தார்?]

    வீரமணிக்கப்புரம் அடுத்த தலைவராக அவரது மகனை விட்டால் இயக்கத்தில் ஒருத்தருக்கும் யோக்கியதை கிடையாதா?

    நாத்தீகம் பேசும் யோக்கியர்களே, உங்கள் பெண்டாட்டி பிள்ளை குட்டிகள் எல்லாம் எதற்காக போலிச் சாமியார்களின் கூடாரங்களுக்கு வாரா வாரம் போகிறார்கள்? உங்கள் பெண்டாட்டி பிள்ளை குட்டிகளுக்கு எடுத்துச் சொல்லி அவர்களால் ஏற்க முடியாத கொள்கைகளை எங்களுக்கு விற்க வருகிறீர்களா? உங்கள் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாத அவர்களுக்கு எதற்கு நீ கொள்ளையடித்து சொத்து சேர்க்க வேண்டும், அடுத்து கட்சியின் உயர் பதவிக்கு உன் கொள்கையை ஏற்காத உன் வாரிசுகளே வர வேண்டும் என்று நீ துடிப்பது எதற்கு?

    ReplyDelete
  9. \\உங்கள் தளத்துக்கு மட்டுமல்ல உங்கள் தளத்துக்கும், உங்களைப் போன்ற பிதற்றலோடு எழுதும் தளத்துக்களுக்காகவே உருவாக்கியிருக்கிறோம்.\\ பெரியார் மாதிரி பிதற்றியவர் யாரேனும் உண்டா?

    http://www.youtube.com/watch?v=iHJVX679w2k&feature=relmfu
    http://www.youtube.com/watch?v=Y5cYO4H2GOk&feature=relmfu
    http://www.youtube.com/watch?v=VBmzX252gSM&feature=relmfu

    ReplyDelete
    Replies
    1. இந்து மதம் எங்கே போகின்றது? என்று இரண்டு பாகங்கள் அக்னிகோத்ர தாத்தாச்சியர் எனும் பார்ப்பனர் ஒருவரால் நக்கீரன் நிறுவனத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது...

      அதில் இந்து மதத்தின் பிதற்றல்களையும், சங்கர மடங்களின் உண்மை நிலைமையையும் தெளிவாக எடுத்துக்கூறியுள்ளார்....

      Delete
    2. எவனோ பிதற்றட்டும், நண்பர்களே, உங்களை தி.க காரனுங்க துஷ்பிரயோகம் பண்ணப் பார்கிரானுங்க, மாட்டிக்காதீங்க, போயி உங்க அப்பா அம்மா பேச்சை கேளுங்க, உங்க குடும்பத்த பாத்துக்குங்க, இவனுங்க உங்களுக்கு நல்லது பண்ண மாட்டானுங்க, ஏன்னா அவனுங்க பெத்த மகன்கள்/வாரிசுகள் தான் அவனுங்களுக்கு முக்கியம். கருணாநிதி கட்சிக்காரன் தான் தீக்குளிப்பான், அவன் குடும்பம் நடுத் தெருவுல நிற்கும், ஆனா கருணாநிதி பேரனுங்க நூற்றுக் கணக்கான கோடி பணம் வச்சி படம் எடுப்பானுங்க, அவனுங்க என்னைக்காச்சும் தீக்குளிப்பானுன்களா? ஏம்பா இப்படி இவனுங்கள நம்பி வீணாப் போறீங்க. கருணாநிதி, வீரமணி ரெண்டு பேருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான், ரெண்டு பேத்துக்கும் வாரிசுங்க தான் முக்கியம், அதுக்கு உங்க உழைப்பும், உயிரும் அவனுங்களுக்கு வேணும், கொள்கை புண்ணாக்கு என்பது எல்லாம் உங்களைப் போன்றவர்களை ஏமாத்த மட்டும்தான், வேண்டாம்ப்பா ஏமாறாதீங்க, நீங்க கடவுள் இல்லைன்னு சொல்லிட்டு போங்க, சங்கர மடத்தை உடச்சு போடுங்க, ஆனா இவனுங்க கிட்டா மாட்டிக்காதீங்க. Good Bye.

      Delete

தங்களின் கருத்துக்களை வரவேற்கிறேன்.... அறிவு நாணயத்தோடு கேள்விகளும், கருத்துக்களும் இருக்கவேண்டும்.