புதுக்கோட்டை ஜூன் 11- தஞ்சை மாவட்டம், பட்டுக் கோட்டை கழக மாவட்ட இளைஞரணித் தலைவர் சோம.நீலகண்டன் - தேவி ஆகி யோரின் வாழ்கைத்துணைநல ஏற்பு விழா பேராவூரணி பேரூ ராட்சி திருமண அரங்கத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு தமி ழர் தலைவர் அய்யா கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் இராச கிரி.கோ.தங்கராசு, கழகப் பொதுச்செயலாளர் இரா. செயக்குமார், கழக அமைப்புச் செயலாளர் இரா.குணசேகரன், பட்டுக்கோட்டை கழக மாவட் டத் தலைவர் ஆர்.பி.எஸ். சித் தார்த்தன், அறந்தாங்கி கழக மாவட்டத் தலைவர் இராவ ணன், புதுக்கோட்டை மாவட் டத் தலைவர் மு.அறிவொளி, திருவாரூர் மண்டலத் தலைவர் கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியைத் தலைமை வகித்து நடத்தி வைத்து சிறப்பு ரையாற்றி தமிழர் தலைவர் அவர்கள் பேசும்போது திரா விடர் கழகத் தலைவர் என்கிற முறையில் நான் இந்த நிகழ்ச் சிக்கு வரவில்லை. கழகக் குடும்ப விழா நடத்துகிறோம் என்கிற முறையில் வந்திருக்கிறேன். இங்கு இந்திய கம்யூனிஸ்ட் கட் சியின் மாநிலக்குழு உறுப்பினர் பாலசுந்தரம் குறிப்பிட்டதைப் போல மணமகனின் தந்தையார் சோமசுந்தரம் அவர்கள் 50-ஆண்டு காலம் பொதுவுடைமை இயக்கத்தில் இருந்துள்ளார். கொள்கை ரீதியாக பொதுவு டைமை இயக்கத்திற்கு அடிப் படை தந்தை பெரியாரின் பகுத் தறிவுக் கொள்கையாகும்.
அதனால்தான் தோழர் ஜீவானந்தம் அவர்களும், சிங் காரவேலர் அவர்களும் தந்தை பெரியாரிடத்தில் இருந்து பகுத் தறிவுக் கொள்கையை ஏற்று அதன் வழி நடந்து பொதுவு டைமை இயக்கம் நடத்திய வர்கள். அதனால்தான் இன்று பகுத்தறிவுக் கொள்கையும் பொதுவுடைமைக் கொள்கை யும் சிறப்பாகச் செயல்படு கின்றன. இந்த விழாவும் அதன் வழி நடக்கிறது.
மணமகனான சோம.நீல கண்டன் அவர்கள் சிறந்த சிந்தனையாளராகவும் செயல் வீரராகவும் இருக்கிறார். கண் ணியம் மிக்கவராகவும் கழகக் கட்டுப்பாட்டுடன் இருப்பவர். தந்தை பெரியாரின் கொள்கை களை ஏற்று அதன்வழியில் சிறப்பாக செயல்படுவதால்தான் இன்று இளைஞரணித் தலை வராகி இருக்கிறார். அதேபோல் மணமகளும் எம்காம்.பயின்றி ருக்கிறார். மேலும் ஆராய்ச்சிப் படிப்பையும் தொடர இருக் கிறார். அவர்களுக்கு அறிவுரை சொல்லத் தேவையில்லை என் கிற அளவிற்கு இன்று சமூகத் தில் உயர்ந்திருக்கிறார்கள்.
கல்வி மறுக்கப் பட்ட தமிழ கத்தில் இன்று 575- பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. கட் டடங்கள் இருக்கிறது என்று திரும்பிப் பார்த்தால் அது கல்வி நிறுவனமாகத்தான் இருக்கிறது. அந்தளவிற்கு கல்வி நிலை உயர்ந்திருக்கிறது. பொறியாளர் கள், மருத்துவர்கள், வழக்கறி ஞர்கள் நீதிபதிகள் என்று பெரிய பொறுப்புகளில் அமர்ந் திருக்கும் அதே வேளையில் இன்னொரு கவலை தரும் தக வல் - பெற்றோரைக் கவனிக்கும் பிள்ளைகள் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. அதாவது பெற்றோருக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் குறைந்திருக் கிறது. அந்த நிலையை இளைய சமுதாயம் மாற்ற வேண்டும். பெற்றோருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பேசினார்.
நிகழ்ச்சியில் பேராவூரணி பேரூராட்சித் தலைவர் அசோக் குமார் முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மல்லிகை வை.முத்துராமலிங் கம் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் திருஞானசம்பந்தம் மாநில ப.க. பொதுச்செயலாளர் வடசேரி இளங்கோவன் மாவட்ட துணைச் செயலாளர் இரா.நீலகண்டன் அறந்தாங்கி மாவட்ட செயலாளர் மாரி முத்து சேதுபாவாசத்திரம் ஒன்றியத் தலைவர் பெரியராசன் விடுதலை வாசகர் வட்டத் தலைவர் ஆசிரியர் வேலு செய லாளர் முனைவர் கரு.கிருஷ்ண மூர்த்தி மாநில சத்துணவு ஊழியர் சங்கப் பொறுப்பாளர் கணேசன் முன்னாள் ஒன்றிய துணைத் தலைவர் பெரியய்யா உட்பட பலரும் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார்கள். மண மக்களின் பெற்றோர்களான வலப்பிரமன்காடு சோமசுந்தரம் மீனாகுமாரி பாலகிருஷ்ணா புரம் செல்லையா - புஷ்பம் ஆகியோருக்கு தமிழர் தலைவர் அய்யா அவர்கள் கவுரவித்து சிறப்புச் செய்தார்.
மணமகனின் சமயோசிதமான முடிவு தமிழர் தலைவர் பாராட்டு
வாழ்க்கைத் துணை ஏற்பு விழாவின்போது மணமகன் நீலகண்டன் சங்கிலி அணிவித்தபோது தலைவழியாக அந்தச் சங்கிலி நுழையவில்லை. நீலண்டன் அப்படியே கழற்றி எடுத்து விட்டு மணமகளின் சடை வழியாக சங்கிலியை மாட்டி திருப்பிக் கழுத்தில் அணிவித்தார்.
அதைக் கண்ணுற்ற தமிழர் தலைவர் அவர்கள் மீண்டும் ஒலிபெருக்கியை வாங்கி இந்த நிகழ்வைக் கவனித்துப் பார்த்தீர்களா? எம்போதுமே நம் மக்கள் மணமகளுக்கு தலையில் கொஞ்சம் அதிகமாகப் பூவைச் சுற்றி விடுவார்கள். சங்கிலி அணிவிக்க வேண்டும் என்று சொன்னவுடன் அதை வாங்கிப் பார்த்தேன். அதில் தாலி இல்லை. டாலர் மட்டும் இருந்தது. அதை அணிவிக்க முயன்றபோது தலை வழியாக நுழையவில்லை. மணமகன் மிகவும் சமயோசிதமாக சடைமுடி வழியாகக் கொண்டு வந்து எளிதாக அணிவித்து விட்டார். இந்த மணமக்கள் இருவரும் சிறப்பாக வாழ்க்கை நடத்துவார்கள் என்பதற்கு இது நல்ல சான்றாகும் என்றார். (பேராவூரமணி மணவிழாவில்...)

