Sunday, August 19, 2012

பெரியாரின் பெண்விடுதலைச் சிந்தனைகள்




தமிழ்த்திருநாடு சான்றோர் பலரை நாட்டிற்கு வழங்கி அணி செய்திருக்கிறது. மொழிக்காக வாழ்ந்தவர் பலர். நாட்டின் விடுதலைக்காக வீழ்ந்தவர் பலர். மண்டிக் கிடந்த மூடக்கருத்துகளைச் சிதைத்தவர் சிலரே. அவருள் தமிழ்நாடு தவம் செய்து பெற்றவர் ஒருவருண்டென்றால், அவர்தாம் பெரியார்.

தொண்டு  செய்து  பழுத்த  பழம்
      தூயதாடி  மார்பில்  விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
      மனக்குகையில் சிறுத்தை எழும்.

                              இப்பாடல் வரிகள் பெரியாரைப் பற்றிய பாவேந்தரின் படப்பிடிப்பு.

பழந்தமிழ்ச்சமுதாயத்தில் பெண்கள் நன்மதிப்புப் பெற்றிருந்தார்கள்; புலவராய், பாடினியாய், விறலியாய்த் திகழ்ந்து மாண்புடை மன்னரால் மதிக்கப் பெற்றார்கள். கல்வி நலம் பெற்ற பெண்பாற் புலவர்க்கு மன்னரும் பணிந்தனர். மறக்கொண்ட மன்னனின் பகையை மாற்றத் தூது சென்ற பெருமையையும் அக்காலத்துப் பெண்கள் பெற்றிருந்தார்கள். அக்காலச் சூழல் பிற்காலத்தே மாறியது. வந்தவர் கூறிய கருத்தையெல்லாம் இங்கு வாழ்ந்தவர் ஏற்றனர்; பெண்களை அடிமைப்படுத்தினர்; வீட்டிற்குள் முடக்கி வைத்தனர். எனவே, நாட்டு விடுதலைக்குப் போராடிய பெரியார், பெண்களின் சமூக விடுதலைக்கும் போராடினார்.

பெரியாரின் பெண்விடுதலைச் சிந்தனைகள் இரண்டு வகை. ஒன்று, அடிப்படைத் தேவைகள்; பிறிதொன்று, அகற்றப்படவேண்டியவை. பெண்கல்வி, பெண்ணுரிமை, சொத்துரிமை, அரசுப்பணி ஆகியன  அடிப்படைத் தேவைகள். குழந்தைத் திருமணம், மணக்கொடை, கைம்மை வாழ்வு ஆகியன அகற்றப்படவேண்டியனவை.

பெண்கல்வி:
பெண்கல்வி முன்னேற்றத்திற்குப் பெருந்தடை, வீட்டில் அவர்களை முடக்கி வைத்ததே. இது நாட்டு நடப்பை ட்அறியவிடாமல்  அவர்களின் அறிவை மறைக்கச் செய்வதாகும். `நமது சமுதாயத்தில் பெண்கள் சார்ந்த தலைகீழான ஒரு புரட்சி ஏற்பட்டாலொழிய, பெரிய மாறுதல்களைக் கொண்டு வரவியலாது. அப்படி மாறுதல்கள் ஏற்பட்டாலும் அதனால் பயனொன்றும். பெண்கள் மனிதப் பிறவிகளாக நடமாட வேண்டுமானால், முதலில் அடுப்பங்கரையை விட்டு அவர்களை வெளியேற்றவேண்டும். பெண்கள் கல்வி பெறுவது அவர்கள் உரிமை மட்டுமன்று; சமூக மாற்றத்திற்கு மிக இன்றியமையாததும் ஆகும். பெண்கள் கல்வி கற்றாலொழிய சமூக மாற்றங்கள் ஏற்படாது’ என்று பெரியார் உறுதியாக எடுத்துரைத்தார்.

"ஆண்கள் பெண்களை படிக்க வைக்க வேண்டும். அவர்களுக்கு உலகப் படிப்பும், ஆராய்ச்சிப் படிப்பும் தாராளமாய்க் கொடுக்கவேண்டும். நாட்டிலுள்ள கேடுகளில் எல்லாம் பெருங்கேடு பெண்களைப் பகுத்தறிவற்ற சீவன்களாய் வைத்திருக்கும் கொடுமை; இவ்விழிநிலை ஒழிக்கப்பட வேண்டும்" என்றார் பெரியார்.

பெண்ணுரிமை:
பெண்கள் உரிமை பெற்றுப் புது உலகைப் படைக்கவேண்டும் என்று விரும்பியவர் பெரியார். அதற்காக அவர், அவர்களை ஆயத்தப்படுத்தும் முறையே தனியானது. ` ஆணுக்கு பெண் இளைப்பில்லை’ என்று சிந்தித்தவர் பெரியார். ` பெண்கள் தத்தம் கணவனுக்கு மட்டுமே உழைக்கும் அடிமையாக இராமல், மனிதசமுதாயத்திற்குத் தொண்டாற்றும் புகழ் பெற்ற பெண்மணிகளாக விளக்கவேண்டும்’ என்று வலியுறுத்தினார்,

சொத்துரிமை:
பெரியார் பெண்ணுரிமை மறுப்புக்கான காரணங்களை நன்கு ஆராய்ந்தார். பெண்களுக்கு வழிவழிவரும் சொத்துரிமை மறுக்கப்பட்டமையே அவர்களின் அடிமை வாழ்வுக்கு அடிகோலியது என்று உணர்ந்தார். அதற்காக, அவர்கள் போராடவும் கிளர்ச்சி செய்யவும் வேண்டுமெனக் கூறினார்.

``பெண்களுக்குச் சொத்துரிமை கொடுத்துவிட்டால், அவர்களுக்கு இருக்கும் எல்லாவகையான அடிமைத்தனங்களும் ஒழிந்துபோகும்.பெண்ணடிமை என்பதற்குள்ள காரணங்கள் பலவற்றில் சொத்துரிமை இல்லாதது என்பதே முதன்மையான காரணம். ஆதலால், பெண்கள் தாராளமாகவும் துணிவுடனும் முன்வந்து சொத்துரிமைக்குக் கிளர்ச்சி செய்யவேண்டியது மிகவும் இன்றியமையாத உடனடிச் செயலாகும்’’ என்று பெரியார், தம் கட்டுரைகளில் எழுதியும்  மேடைகளில் பேசியும் வந்தார். இன்று  அச்சிந்தனை நடைமுறைக்கு வந்ததுள்ளது.

அரசுப்பணி:
அனைத்துத் துறைகளிலும் ஆண்களைப்போலவே பெண்களும் அரசுப்பணியைப் பெறவேண்டும். அரசாங்கத்தின் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணியாற்றம்போது, நம் சமுதாயத்தில் புரட்சி ஏற்படும். `` பெண்களுக்கு எல்லா வகையான உத்தியோகமும், கிடைக்கச் செய்ய வேண்டுமென்று வற்புறுத்திக் கூறுகிறோம்’’ என்று, பெரியார் அன்று சிந்தித்ததனைத் தமிழக அரசு இன்று நடைமுறைப்படுத்தி வருகின்றது.

அகற்றப்பட வேண்டியவை:
சடங்குகளையும் மூடநம்பிக்கைகளையும் களைவதில் உறுதியான உள்ளம் படைத்தவராக இருந்தார் பெரியார். பெண்ணுரிமைக்கு ஊறுவிளைவிக்கும் பழைய நம்பிக்கைகளை ஏற்க மறுத்தார். விடுதலைக்கு முன்னிருந்த பெருங்கொடுமைகளுள் குழந்தை மணமும் ஒன்று. ஆளும் அறிவும் வளர்வதற்கு முன்பாக வாழ்க்கைப் பயணமா ? இது, சிற்றில் சிதைத்து விளையாடும் பருவத்தில் பெற்றோர் செய்த வேதனை விளையாட்டு எனக்கூறி அதனை நீக்கப் பாடுபட்டார்.

மணக்கொடை மறுப்பும் கைம்மை ஒழிப்பும்:
 தமிழர்களிடம் இன்று பரவியுள்ள பெருநோய் ஒன்று உண்டு. அதுவே மணக்கொடை. பெற்றோர் பலர், தம் மகனின் கல்விக்காகப் பணம், செலவழிப்பதனைத் தங்கள் கடமையைச் சேர்ந்தது எனக் கருதாது, அதை ஏதோ ஒரு தொழிலில் போட்ட முதலீடாகவே கருதுகின்றனர்.

அந்த முதலீட்டை வட்டியுடன் சேர்த்தே, அவனுக்கு வரப்போகின்ற மனைவிமூலம்  மணக்கொடையாய்ப் பெற்றுவிடவேண்டுமென்று துடிக்கின்றனர்.  சமுதாயத்தில் முறையான ஒழுக்கமும் அன்புமும்  தியாக உணர்ச்சியும் ஏற்பட்டால்தான், இம்மாதிரியான தீமைகளை ஒழிக்க இயலும். தமிழ்நாட்டு இளைஞர்கள், மாணவர்கள், பட்டதாரிகள் ஆகியோர் செக்குமாடுகளாக இல்லாமல், பந்தயக்குதிரைகளாக மாறவேண்டும். "தாமே பாடுபட்டு உழைத்து முன்னேறவேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம், நம் இளைஞர்களிடையே வளரவேண்டும்" என்று பெரியார் நார்ப்பறை ஆர்த்தார். கணவனை இழந்தோர் மறுமணம் செய்துகொள்வதில் தீங்கில்லை என்றும் தெரிவித்தார்.

ஒழுக்கம்:
` ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்’ என்னும் வள்ளுவர் வாய்மொழியை நன்குணர்ந்தவர் பெரியார். ஒரு நாடு வளத்துடன் இருக்கவேண்டுமானால், அந்நாட்டு மக்கள் அனைவரும் ஒத்த ஒழுக்கமுடையவர்களாக இருக்கவேண்டும். ஒழுக்கமென்பதும் கற்பென்பதும் பெண்களுக்கு மட்டும் என்றில்லாமல் ஆண், பெண் இருபாலர்க்கும் பொதுவாகும் என்பது, அவர்தம் கருத்து.

பெரியார், சமூக முரண்களை எதிர்த்தவர்; மூடக்கருத்துகளை முட்டறுத்தவர்; தொலைநோக்குப் பார்வையுடையவர்; பகுத்தறிவுக்குப் பொருந்தாதவற்றை அறுத்து எறிந்தவர்; சமூகமாற்றத்தை விரும்பியவர்; பெண்களே சமூகத்தின் கண்கள் எனக் கருதியவர்; பெண்களை அடிமைத்தளையிலிருந்து மீட்டவர். பெரியார் வழிகாட்டுதலால், தமிழகம் இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது.

(நன்றி: பத்தாம் வகுப்பு, தமிழ் உரைநடைப்பகுதி, 2012 சமச்சீர்கல்வி பாடத்திட்டம்)

****************************
தட்டச்சு செய்து உதவியர் : மானமிகு கு.நீலகண்டன் தி.க., மாணவரணி, பேராவூரணி-சேதுபாவாசத்திரம் 
****************************

இதுவல்லவா சாதனை.... 50 - ஆண்டுகாலம் தொடர்ந்து ஆசிரியர் பணி...



  1. எட்டு வயதில் ஈரோட்டுப் பாதையில் அடியெடுத்து வைத்தவர்.
  2. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதல் மாணவராய்த் திகழ்ந்து தங்கப்பதக்கம் வென்றவர்.
  3. இருதய அறுவை சிகிச்சைக்குப் பிறகும் ஓய்வு உறக்கமின்றி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குப் போராட, சமுக நீதிக்கு வாதாட வழக்கறிஞர்-எழுத்தாளர்-பேச்சாளர்-கருத்தாளர் எனக் களம் காண்பவர்.
  4. இட ஒதுக்கீட்டில் ரூ.9000 வருமான வரம்பு கூடாது எனப் போராடி வென்றவர்.
  5. பிற்படுத்தப்பட்டோருக்கான 31 சதவித இட ஒதுக்கீட்டை 50 சதவிகிதமாக உயர்த்திய அரசு உத்தரவிற்கு மூல காரணமானவர்.
  6. 69 சதவீகித இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து வந்தபோது 31-சி பிரிவின் கீழ் சமூக நீதிக்காக சிறப்பு தனிச் சட்டத்தினை (Tamilnadu Govt. special Act) தமிழக அரசுக்கு வகுத்துக்கொடுத்து சமூக நீதியைப் பாதுக்காத்தவர்.
  7. இந்திய அரசு மண்டல்குழு பரிந்துரையை ஏற்கச் செய்திட 16 போராட்டங்களையும் 42 மாநாடுகளையும் நாடுதழுவிய அளவில் நடத்தி மத்திய அரசில் சமுக நீதியை நிலை நாட்டியவர்.
  8. கொள்கை ரீதியாக எதிர்க்கும் எதிரியும், துரோகியும் கூட குறைசொல்ல முடியாத ஒழுக்கமும், நாணயமும் மிக்க ஒரே தலைவர்.
  9. தான் சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டு தனது பிள்ளைகளுக்கும் சாதி மறுப்பு – மத மறுப்புத் திருமணங்ளை செய்து வைத்து சாதி ஒழிப்புப் போருக்கு தகுதியோடு தலைமையேற்பவர்.
  10. தழிழர் நலம் காக்க 43 கல்வி அறப்பணி நிறுவனங்கள், குழந்தைகள் இல்லம், முதியோர் இல்லம், இலவச மருத்துவ மனைகள் நடத்தி வரும் தொண்டறச்செம்மல்.
  11. ஓராண்டு மிசாக்கொடுமை உட்பட 47 முறை சிறை சென்று தமிழர் உரிமை காக்க – மானம் மீட்கப் போராடும் மகத்தான தலைவர்.
  12. தனக்கு மாலைக்குப் பதிலாக வழங்கப்பட்ட நிதி, எடைக்கு எடை வழங்கப்பட்ட வெள்ளி ஆகியவற்றைக்கொண்டு பெரியார் நகர்வுப் புத்தகசந்தை எனும் பேருந்து, பிரச்சார வேண்களாக்கி தந்தை பெரியாரின் கருத்துகள் அடங்கிய புத்தகங்கள் தமிழகமெங்கும் எளிதாகக் கிடைத்திட செய்திட்ட ஏந்தல்.
  13. தனக்கு எடைக்கு எடை வழங்கப்பட்ட தங்கம் முழுவதையும் இயக்கத்திற்கே வழங்கிய தன்நல மறுப்பாளர்.
  14. காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தால் டாக்டர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்ட தலைவர்.
  15. புதுடெல்லியில் இரண்டு பெரியார் மையம் கண்ட பேரறிவாளர் 
  16. அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக்க பல்வேறு போராட்டங்களை நடத்தி வென்ற தலைவர்.
  17. உலக நாத்திக மையத்தின் துணைத் தலைவராக பொறுப்பேற்று உலகின் பல்வேறு நாடுகளில் தந்தை பெரியாரின் கொள்கைகளை பரப்பி வரும் தொண்டறச்செம்மல்.
  18. 78 அகவையில் 70 ஆண்டு பொதுவாழ்வு எனும் யாரும் உடைக்க முடியாத உலக சாதனையைப் படைத்து அன்று முதல் இன்று வரை ஒரே கொள்கை,

ஒரே கொடி, ஒரே தலைவர் என வாழும் ஒரே தலைவர்

**************************************************************************

வெளியீடு: ஒன்றிய, நகர திராவிடர் கழகம், பேராவூரணி-சேதுபாவாசத்திரம்

ஆக்க உதவி: மானமிகு கு.நீலகண்டன், தி.க. மாணவரணி, சித்தாதிக்காடு கிளைக்கழகம்.

அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா?



"பூமி சுற்றுவதை பிரதட்சணம், அப்பிரதட்சணம் என்று அப்பொழுதே சுட்டிக்காட்டினார்கள்" என்கிறார் கண்ணதாசன்.  (அர்த்தமுள்ள இந்துமதம் பாகம்-2, பக்கம் 109)

பூமி சுற்றுகிறது என்ற உண்மை இந்துமதவாதிகளுக்கு அக்காலத்திலையே தெரிந்திருக்குமானால், பூமி உருண்டை என்பதும் அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.  பூமி உருண்டையென்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தால், சூரன் பூமியை பாயாகச் சுருட்டினான் என்னும் கதையை அவர்கள் ஏன் எழுதினார்கள்.

தட்டையாகவுள்ள ஒன்றைத் தானே சுருட்ட முடியும்?

பூமி பாய் போல் தட்டையாக இருக்கிறது என்றே அவர்கள் எண்ணியிருக்கிறார்கள்.  எனவே, பூமி உருண்டை என்ற உண்மை அவர்களுக்கு தெரியாது.  பூமி உருண்டை என்ற உண்மை  தெரியாதவர்களுக்கு, அது சுற்றுகிறது என்ற உண்மை தெரிய வாய்ப்பே இல்லை.

பூமி சுற்றுகிறது என்ற உண்மை அவர்களுக்குத் தெரிந்திருக்குமானால், பூமி அந்தரத்தில் மிதந்துக்கொண்டிருக்கிறது  என்ற உண்மையும் அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்!  பூமி அந்தரத்தில் மிதக்கிறது என்ற உண்மை அவர்களுக்குத் தெரிந்திருக்குமானால்,  பூமியை ஆதிசேஷன் தாங்குகிறான் என்று அவர்கள் நம்பியிருக்க வேண்டாம், அவ்வாறு கதையெழுதியிருக்க வேண்டும்.

பூமியை ஆதிசேஷன் தாங்குகிறது என்றால், அந்த ஆதிசேஷன் எதன் மீது நின்று கொண்டு பூமியைத் தாங்குகிறது? என்பதைக் கூட சிந்தித்துப் பாராத அறிவிலிகளே இந்து மதத் தலைவர்கள்.

(நன்றி : அர்த்தமற்ற இந்து  மதம் பாகம் -2 , மஞ்சை வசந்தன்)

Saturday, August 18, 2012

விரைவில் எதிர்பாருங்கள்......

  1. மானங்கெட்ட மகாலிங்க புராணம்
  2. பராசக்தியையும் கற்பழித்தான் பிரம்மன்
  3. சீதை ராவணனுடன் சம்மதித்தே சென்றாள்
  4. பார்வதியின் அழுக்குருண்டை கடவுள்
  5. மும்மூர்த்திகளின் வண்டவாளம்
  6. அயோக்கியன் மகன் ஐயப்பன்..
  7. எமதர்ம தேவனின் கற்பழிப்புகள்..
  8. அக்னிதேவனின் அக்கிரமங்கள்...
  9. தேவேந்தரனின் கெட்ட நடத்தைகள்
  10. தீயதான  தீபாவளிப் பண்டிகை...
  11. ஆறேழு புருசன்களுக்கு ஆசைக்கு இணங்கியவள் எப்படி அழியாத பத்தினியாவாள்...
  12. பஞ்ச பாண்டவரின் பிறப்பு...
  13. கவுரவர்களின் பிறப்பு..
 இதுபோன்ற இன்னும் பல தலைப்புகளில் விரிவான விளக்கம்  விரைவில்  எதிர்பாருங்கள்....

குளமங்கலம் அய்(யோ)யனார் !!!

குளமங்கலத்தில் பெருங்காரைப் பத்தையில் கிளம்பிய அய்யனார் என்பவனுக்கு வருடம் தோறும் மாசிமக விழா இரண்டு நாள் நடைபெறும்.  

அவர் ஊரையும் காப்பார், வருவோரையும் காப்பார் என்றனர். (காவலுக்கு காவல்துறை ஏன்)  ஆனால் நடந்ததோ அவர் அனைவரையும் ஏய்த்தார்.

2012-ல் நடந்த தெப்ப திருவிழாவில் அய்யனார் தலைகிழாக குப்புறக் கவிழ்ந்து தண்ணீருக்குள் உள் நீச்சல் அடித்து மூச்சுத்திணறி மயக்கம் அடைந்து இறந்தார் என்றும் இல்லை இல்லை அவர் பிழைத்து விட்டார் என்றும் செய்தி வெளியானது.

எப்படியிருந்தாலும் அய்யனார் ஒரு உதவாக்கரை, உருப்படாதவர்  அவரால் பயனேதுமில்லை என்பதை இந்த நிகழ்வு மூலம் அனைவரும் அறியவும்.

அய்யனார் தெப்பத்தில் இருந்து தண்ணீருக்குள் குப்புறக்கவிழ்ந்த  கண்கொள்ளா காணொளி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



Friday, August 17, 2012

முற்போக்கு முருகன் - காரைக்குடி புயல்ராஜ்

இசை நாடக அமைப்பாளர் சங்கம் - காரைக்குடி இந்த சங்கத்தில் நாடக கலைஞராக தன்னுடைய சிறப்பான நடிப்பால் கிராமங்கள் தோறும் நடைபெறக் கூடிய வள்ளி-திருமண நாடகங்களில் முருகனாக வேடமேற்று மேடை தோறும்  சிறப்பாக சீரிய முற்போக்கு கருத்துக்களை கூறி நாடகமென்றால் வேடிக்கை கேளிக்கை என்ற நிலையை மாற்றி பல பயனுள்ள கருத்துக்களை  முருகனாக வந்து மக்கள் பயனடையக் கூடிய வகையில் பகுத்தறிவோடு பரப்பி வருகிறார்.

அந்த முற்போக்கு முருகன் யாரென்றால் அவர்தான் நாடகக் கலைஞர் புயல்ராஜ் அவர்கள்.



இவர் செங்கத்தான்குடி கிராமம், மித்ராவயல் அஞ்சல், புதுவயல் வழி, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

இவரின் நகைச்சுவை நாடக நடிப்பு, பகுத்தறிவு கருத்து, முற்போக்குச் சிந்தனை ஆகியவற்றை கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்புகளைச் சொடுக்கி தரவிறக்கம் செய்து பார்த்து மகிழுங்கள்.



**********************************
ஆக்கம்:
சோம.நீலகண்டன்
ப.மகாராசா
இரா.கதிர்வேல்
க.காந்தி
வ.ஆத்மநாதன்
ந.கண்ணன்
செ.முத்துக்குமார்
வ.கிருஷ்ணமூர்த்தி
க.ராஜேந்திரன்
அ.திருப்பதி
ரெ.மணிமாறன்
சி.முண்டையன்
சி.சுந்தரம்
வ.க.சிவலிங்கம்
த.ராஜேந்திரன்

**********************************

திராவிடர் கழக தலைமைக் கழக பேச்சாளர் - நகைச்சுவையரசு மானமிகு இராம.அன்பழகன் அவர்களின் உரைகள்


நகைச்சுவையரசு மானமிகு இரா.அன்பழகன்

பேராவூரணி ஒன்றிய அளவில் நடைபெற்ற மூடநம்பிக்கை, பகுத்தறிவு, சமூகநீதி, பெண்ணடிமை ஒழிப்பு, சாமியார்களின் மோசடி, சாதி மத தலைவர்களின்  மோசடி  ஆகியவற்றைப் பற்றி  இராம.அன்பழகன் அவர்களின் உரை.

இணைப்பைச் சொடுக்கி தரவிறக்கம் செய்து அறியாமை, மூடநம்பிக்கை, பக்தி போதை இவற்றை கேட்டு அறிந்து, தெரிந்து, புரிந்து, தெளிந்து, மகிழ்ந்து, பகிர்ந்து  பயன்பெற வேண்டுகிறோம்.
















 **********************************

ஆக்கம்:
சோம.நீலகண்டன் தி.க மாவட்ட இளைஞரணி தலைவர், பட்டுக்கோட்டை கழக மாவட்டம்.

Thursday, August 9, 2012

பொதுமக்களே! மாணவர்களே! சிந்திப்பீர்!

  • பக்தியுள்ள மாணவன் படிக்காமல், பரிட்சை எழுதாமல் பாசாவானா?
  • அம்மன் சிலையை ஆண் பூசாரி குளிப்பாட்டலாமா?
  • அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது, எல்லாம் அவன் செயல் என்றால் ? சுனாமி, திருடு, வழிப்பறி, கொலை, கற்பழிப்பு, விபத்து எல்லாம் எவன் செயல்?
  • சர்வசக்தி உள்ள சாமிக்கு, கதவும், பூட்டும், சாவியும் ஏன்?
  • உலகை படைத்தது கடவுள் என்றால் கடவுளை படைத்தது யார்?


சாதி பேதமற்ற, ஏற்ற தாழ்வு இல்லாத சமுதாயம் படைப்போம்!
மாணவர்களே!  பொதுமக்களே!  சிந்திப்பீர்!
திராவிடர் கழகத்தில் இணைந்திடுவீர்!

**********************************

(உருவாக்கம் : கு.நீலகண்டன், தி.க. மாணவரணி, சித்தாத்திக்காடு கிளைக்கழகம் பேராவூரணி நகரம்)

வெளியீடு: ஒன்றிய,  நகர திராவிடர் கழகம், பேராவூரணி-சேதுபாவாசத்திரம்.

ஓம் ... ஓம் .... ஓம்


இந்து மதத்தின் சமாச்சாரங்கள் அத்துனையும் ஆபாசத்தின் ஊற்றும், பிறப்புமாகும். `ஓம்’ என்பது அந்த அடிப்படையிலேயே அமைந்த ஒன்றாகும். மறைமலை அடிகளார் எழுதிய சைவ சித்தாந்த ஞானபோதகத்தில் சைவ சித்தாந்த நூலாகிய சித்தியாரின் பாட்டை எடுத்துக்காட்டிக் கூறியுள்ளார். ஆண் – பெண் குறி சேர்க்கையினாலேயே இன்பமும் உயிர்களின் தோற்றமும் நிகழ்வதால் ஆண் – பெண் குறி சேர்க்கையே தொன்று தொட்டு சிவலிங்க வடிவாக வணங்கப் பெறலாயிற்று; நீண்ட குவிந்த கால் வடிவு ஆண் அடையாளமாகவும், அக்கல்லைச் சூழ்ந்த வட்டகால் வடிவு பெண் குறியின் அடையாளமாகவும் காணப்படுகிறது என்று கூறப்படுகிறது. இந்து சமயத்தின் ஒரு கிளையாகிய தாந்ராவின்படி ஓம் என்ற பொருளின் பதத்திற்கு விளக்கமும், ஆண் – பெண் குறியின் சேர்க்கையே என்பதாக ஒப்பிடப்பட்டுள்ளது. நீதிமன்றத்திலேயே இந்த உண்மைகள் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளன என்றால், சிலருக்கு ஆச்சரியமாகவும் இருக்கக்கூடும்.

 திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் திராவிடர் கழகச் செயலாளர் தோழர் சுப்புரமனியம் ஓம் என்பது குற்றித்த தட்டில் எழுதி, பொதுமக்களின் பார்வைக்கும், சிந்தனைக்குமாக வைத்திருந்தார். (05-06-1990) ஆபாசமானது என்றும் மதநம்பிக்கையாளரின் மனதை புண்படுத்துகிறது என்றும் கூறி அவ்வூர் காவல்துறை வழக்கு ஒன்றைப் பதிவு செய்தது(இந்தியத் தண்டணைச் சட்டம் பிரிவு 298).

பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத்தலைவரும். சீரிய பகுத்தரிவாளருமான பிரபல வழக்கறிஞர் மானமிகு.வை.பாண்டிவளவன் அவர்கள்,கழகத் தோழர் சுப்பிரமணியம் அவர்களுக்காக வாதாடினார். அம்பாசமுத்திரம் நீதித்துறை நடுவர் அ. தேவசகாசம் முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கினை விசாரித்த நீதியரசர் வழக்கை தள்ளுபடி செய்தார் என்பது குறிப்பிடதக்கதாகும்.

       திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரைக்கும் எதைப் பேசினாலும் அல்லது எழுதினாலும் ஆதாரத்தின் வலு மிக அதிகமாகவேயிருக்கும். இராமாயணத்தைப் பற்றி தந்தை பெரியார் பொதுக்கூட்டங்களில்  பேசும்போது கூட பார்ப்பன ஆசிரியர்களால் மொழி பெயர்க்கப்பட்ட நூல்களை மேசையில் அடுக்கி வைத்தே – அதிலிருந்து பக்கம் உட்பட எடுத்துக் கூறிப் படித்துக் காட்டுவார்.

அடுத்தடுத்த பதிப்புகளில் தந்தை பெரியார் எடுத்துக் காட்டிய பகுதிகளை சாமர்த்தியமாக நீக்கிவிட்டு வெளியிட்டதும் கூட உண்டு. அப்படி நீக்கப்பட்ட பகுதிகளையும், பழைய பதிப்பிலிருந்து ஒப்பிட்டு எடுத்திக்காட்டி, எதிரிகளின் அறிவு நாணயக்கோட்டை அம்பலப்படுத்துவார் பெரியார்.

அருவருப்பு, ஆபாசம் இவை இரண்டுமே இந்து மதத்தின் இரு விழிகள் – இரு கரங்கள் என்பதைப் பக்தர்கள் உள்பட அனைவரும் தெரிந்து கொள்க. ஓம் என்ற இந்த ஆபாச வார்த்தை பொறித்த சங்கலியைக் கழுத்தில் தொங்க விட்டுக் கொள்வதும், கோவில்களில் `ஓம்’ என்பதை வண்ண விளக்குகளால் ஒளிரச் செய்வதும் என்னே மானக்கேடு!

எதற்கு புரட்சி? இன்றுள்ள இழிவுகள் குற்றங்கள் அக்கிரமங்கள் ஒழிவதற்காக.

இவற்றுக்கு இருப்பிடங்கள் யாவை? காரணகர்த்தா யார் என்பதை உணர வேண்டும், உணர்த்தும் அவற்றை அழிப்பதற்கு ஆவண செய்ய வேண்டும்.

மதக்குறி என்பது மாட்டு மந்தைக்காரன் தன் மாடுகளுக்குப் போட்டு அடையாளம் போலவே மதத் தலைவர் தனது மதத்தைப் பின்பற்றுகின்றவர்கள் என்பதைக் காட்ட ஏற்படுத்தப்பட்ட குறியேயாகும்.

**********************************

(உருவாக்கம் : கு.நீலகண்டன், தி.க. மாணவரணி, சித்தாத்திக்காடு கிளைக்கழகம் பேராவூரணி நகரம்)

வெளியீடு: திராவிடர் கழக இளைஞரணி, பட்டுக்கோட்டை மாவட்டம்.


நாமம் போட்டுக்கொள்வதன் கதை...


திருநீறு, சந்தனம், லிங்கக் கட்டி – இவை எல்லாமுமே ஆபாசமும், அருவருப்பும், அநாகரிகம், ஒழுக்கக் குறைவு முதலியவற்றின் கூட்டுப்புழுதான். படிக்கவும், காதால் கேட்கவும் கூச்சப்படக் கூடிய நிலைதான்.

ஆனால் இவைதான் ‘இந்து மதத்தின் உச்சக்கட்டமான சமாச்சாரங்களாகப் போற்றப்படுவதும், புராண, இதிகாசங்களில் ஏற்றப்படுவதும், உபந்நியாசிகள்  விழுந்து விழுந்து பிரச்சாரம் செய்வதுமான சமாச்சாரங்கள். வைணவர்கள் என்பவர்களில் இரு பிரிவினர் உண்டு. ஒருவர் வடகலைப் பிரிவினர்; இன்னொருவர் தென்கலைப் பிரிவினர். வடகலைப் பிரிவினர் இரண்டு வெள்ளைக் கோடுகளையம் இணைக்கப் பரவளைவு(parabola) ஒன்றினை நெற்றியில் தீட்டிக் கொள்வார்கள்.

               தென்கிலையினரோ இரண்டு வெள்ளைக் கோடுகளுக்கும் அடியில் தாங்கும் காலை வரைந்து கொள்வார்கள். இன்னும் புரியும்படியாகச் சொல்லவேண்டுமானால், பாதம் வைத்த நாமம், பாதம் வைக்காத நாமம் என்று வேண்டுமானால் சொல்லலாம். இரண்டு வெள்ளைக் கோடுகளுக்கும் இடையே ஒரு சிவப்புக் கோடும் தீட்டப்படும். இதற்கான வியாக்கியானங்கள் என்ன தெரியுமா? திர்நீற்றையும், சந்தனப்பொட்டையும் தவிடுப் பொடியாக்கும்  ஆபாசக் கிடங்கு. இந்த பிரிவினரும் ஒருவருக்கொருவர் கலகம் வளைவித்துக் கொள்ளக்கூடியவர்கள். வடகலைக்காரர்கள்,தென்கலைக்காரர்களை நேரில் கண்டு விட்டாலோ,உடனே சுவரில் போய் முட்டிக் கொள்வார்கள். அதற்கு பெயர் `கண்டு முட்டி’ என்பதாகும்.ஒருவருரைப்பற்றி இன்னொருவர் கேட்டுவிட்டாலும் சுவரில் போய் முட்டிக் கொள்வார்கள். இதற்குப் பெயர் `கெட்டு முட்டி’ என்பதாகும். 

அர்த்தமுள்ள இந்து மதத்தில் இவ்வளவுப் பெரிய ஒற்றுமைக் கோட்பாடு. காஞ்சிபுரத்து யானைக்கு வடகலை நாமம் போடுவதா, தென்கலை நாமம் போடுவதா என்ற வழக்கு லண்டன் பிரிவி கவுன்சில் வரை சென்றது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.சென்னை உயர்நீதிமன்றம் ஒரு வாரம் வடகலை நாமம்,இன்னொருவாரம் தென்கலை நாமம் போடுமாறு தீர்ப்புக் கூறியதுண்டு.  இதுதான் இந்து மதம் – இந்து மதத்துக்குள்ளேயே வளர்க்கும் ஒற்றுமை! இந்த லட்சணத்தில் தான் இந்துக்களே ஒன்று சேறுவீர்! என்று இந்து முன்னணிகள் அறைகூவல் விடுக்கின்றன?

சரி நாமத்தின் இந்த இரு வெள்ளைக்கோடுகளுக்கும் நடுவில் உள்ள சிவப்புக் கோடுக்கும் கூறப்படும் தத்துவம் (?) தான் என்ன? நெற்றியில் செங்குத்தாக இருக்கும் இரண்டு வெள்ளைக்கோடுகளும் மகாவிஷ்ணுவின் தொடைகள் -  நடுவில் இருக்கும் சிவப்புக் கோடு மகாவிஷ்ணுவின் ஆண்குறி. இதற்கு விளக்கு உலக்கை என்ன  தெரியுமா? இதுதான் சிருஷ்டியின் தத்துவமாம்! சுற்றிச் சுற்றி எங்கு வந்தாலும் அர்த்தமுள்ள இந்து மதம் இந்தச் சமாசாரத்தில் தான் முடிகிறது என்பதை கவனிக்க வேண்டும். கேவலமாகப் பேசாதீர்கள் – நாங்கள் நெற்றியில் தீட்டியிருப்பது சாதாரணமானதல்ல – ராமர் பாதம் என்பார்கள் பக்தர்கள் – அப்படியானால்  ராமர் நெற்றியில் போட்டியிருக்கும் நாமம் யார் பாதம் ? என்று கேட்டார் பெரியார் இதுவரை பதில் இல்லையே!

ஒன்றை ஒன்று மட்டும் எப்படியோ சொல்லாமல் விட்டுவிட்டார்கள். அப்படிப்பட்ட சிருஷ்டித் தத்துவத்தை மறைத்து ஆடை உடுத்துவது ஆண்டவன் சிருஷ்டிக்கு விரோதம். எனவே, அனைவரும் சிருஷ்டித் தத்துவத்தை அதை மதிக்கும் வகையில் அம்மணமாக நடமாடவேண்டும் என்று சொல்லாமல், எழுதாமல் விட்டிவிட்டார்களே,அதுவரை ஷேமம்தான்!



**********************************

(உருவாக்கம் : கு.நீலகண்டன், தி.க. மாணவரணி, சித்தாத்திக்காடு கிளைக்கழகம் பேராவூரணி நகரம்)

வெளியீடு: திராவிடர் கழக இளைஞரணி, பட்டுக்கோட்டை மாவட்டம்.


சந்தனம் !!! இதுவா சந்தனம்...


சைவர்கள் நெற்றியில் திருநீறு பூசிக் கொள்கின்றனர்; வைணவர்கள் நெற்றியில் சந்தனமும், நாமமும் தீட்டிக்கொள்கின்றனர். இவற்றிற்கெல்லாம் தத்துவார்த்த முலாம்களைப் பூசுகின்றனர்.கூறும் காரணங்ளை நோக்கும் போது குமட்டிக்கொண்டுதான் வருகிறது. நெற்றியில் சந்தனம் வைத்துக்கொள்வது பற்றி வாசுதேவ உபநிஷத்தில் என்ன கூறப்பட்டுள்ளது? கிருஷ்ணன் கோபிகா ஸ்திரீகளை தழுவிக் கலந்து புண்ர்ந்தபோது. அப்பெண்களின் ஸ்தனங்களிலிருந்தும்(மர்பகம்) கிருஷ்ணன் உடலில் ஒட்டிய பின் அவர்களை கழுவுவதால் வழிந்தோடிய சந்தனமே கோபி சந்தனமே என்று கூறப்படுகிறது.

சுயமரியாதை இயக்கம் நாட்டில் சூறாவளிப் பிரச்சாரத்தை மேற்கொண்டபோது வைதிகர்கள் நடுநடுங்கிப்போனார்கள். திருநீறு, சந்தனம், நாமம் பற்றி புராணங்கள் என்னென்ன கூறுகின்றன என்பதை ஆதாரங்களுடன் புட்டுப் புட்டு வைத்தனர். நாட்டுக்கோட்டை செட்டிமார்கள் பணம் போட்டு இதற்காகவென்றெ பத்திரிக்கை ஒன்றையும் தொடங்கினர்.அதற்கு சிவனேசன் என்று பெயர்.அதன் முதலாவது ஆண்டு 14 ஆவது மலர் அனுபந்தத்தில் கோபி சந்தனம் என்ற பெயரில் எழுதப்பட்டதுதான் மேலே கூறப்பட்ட தகவல் ஆகும்.

பகுத்தறிவுவாதிகள், திராவிடர் கழகத்தினர் இட்டுக்கட்டி எழுதிய கைச் சரக்கல்ல. ஒவ்வொன்றிற்கும் பக்தியில் குளித்து மூழ்கி மஞ்சள் பூசிக்கொண்ட பேர்வழிகளால் எழுதப்பட்ட புராணங்களின் ஆதாரம் கூறினாராம். அமெரிக்காவிலிருந்தபோது விவேகானந்தர் சொன்னதாகக் கூறப்படும் ஒரு கருத்து இன்றளவுக்கும் பலராலும் எடுத்துக்காட்டப்படுகிறது. ஏ! பிராமணர்களே! சர்ப்பம் கடித்துவிட்டால், மந்திரத்தால் அந்த சர்ப்பமேவிஸத்தை இழுக்குமாம் – அதுபோல. நீங்கள் நம் தேசமெல்லாம் கெடுக்கும் வைதீக விஸத்தைப்பரப்பி விட்டீர்கள். நீங்களே இந்த விசத்தை திருப்பி வாங்கிடவேண்டும். உங்கள் வைதிகக்கொடுமையை உங்கள் மதத்தினின்று எடுத்து விட்டீர்களேயானால் உங்கள் மதமே உயர்ந்தது என்று அமெரிக்காவிலிருந்து விவேகானந்தர் கூறினார். 

அமெரிக்காவுக்குச் சென்ற சுவாமி விவேகானந்தர் இந்து மதத்தின் சீலத்தை எடுத்துப்பரப்பினார். சிலம்பம் ஆடினார் என்று கோட்டுவாய் ஒழுக்கபேசும் பார்ப்பணர்கள் விவேகானந்தரின் அறைகூவலை இதுவரை ஏற்றார்கள் இல்லை. வழிபடுவது என்றால் சிவலிங்கத்தை . சிவலிங்கம் என்றால் என்ன என்று கேட்டால். அதற்கொரு லிங்கப்புராணம். தாருகாவனத்து ரிஷிப் பத்தினிப் பெண்களை சிவன் கற்பழித்தானாம்.ரிஷிகள் சாபமிட்டதால் சிவனின் ஆண்குறி அறுந்து வீழ்ந்ததாம்.அதனை தன் குறியால் பார்வதி தாங்கினாராம்.அதுதான் சிவலிங்கமாம் – அதை குப்புற விழுந்து விழுந்து வணங்க வேண்டுமாம்.கேட்டால் அதற்கொரு தத்துவார்த்தம் – ஜீவராசிகளின் உற்பத்தித் தத்துவம் அதற்குள் அடங்கிக்கிடக்கிறதாம். நுரையில் எரிந்து போய் விடும் என்று மாக்ஸ் முல்லர் கூறியது இதனால்தானோ.



**********************************

(உருவாக்கம் : கு.நீலகண்டன், தி.க. மாணவரணி, சித்தாத்திக்காடு கிளைக்கழகம் பேராவூரணி நகரம்)

வெளியீடு: திராவிடர் கழக இளைஞரணி, பட்டுக்கோட்டை மாவட்டம்.



குங்குமம் பூசிக்கொள்கிறோமே அதன் கதை தெரியுமா உங்களுக்கு?


இந்து மதத்தில் `அ’ தொடங்கி `ஃ’ முடிய உள்ள எல்லாச் சமாச்சாரங்களையும் ஆண்,பெண் உடற்சேற்க்கை பற்றிதான்! தனிமையில் பாதுகாக்கப்படும் நாகரிகமாகக் கருதியவற்றை நடுவீதியில் அம்மணமாக்கிக் கொண்டாடுவதுதான் இந்து மதத்தின் இழிவும் – ஆபாசமும் நெளியும் தத்துவார்த்த சாக்கடையாகும். திருநீறு என்றாலும் சந்தனம் என்றாலும் நாமம் என்றாலும் ,இத்தியாதி இத்தியாதிதான்.பெண்கள் நெற்றியில் வைத்துக் கொள்கிறார்களே அதன் சமாச்சார்ம்தான் என்ன ?

சிவபெருமான் என்ற இந்து மதக் கடவுளின் இடுப்பில் பார்வதியும்,தலையில் கங்கையும் மனைவிகளாக உள்ளர் – தலையில் உள்ள கங்காதேவி மாதவிடாயின் போது கசிந்த ரத்தம் சிவபெருமான் நெற்றியில் வடிவதுதான் இந்த குங்குமமாம். இந்த சிவபெருமான் இருக்கிறானே…அசல் காட்டுமிராண்டி இதுகுறித்து தந்தை பெரியார் கூறுவதைக் கவனிக்க வேண்டும். 

புலித்தோல் அரைக்கு இசைத்து
வெள்ளருக்கம்பூ சடைக்கு முடிந்து
சுடலைப் பொடி பூசி
கொன்றைப் பூச்சூடி
தும்பை மாலை அணிந்து
மண்டை ஓடு கையேந்தி
எழும்பு வடம் தாங்கி
மான், மழ், ஈட்டி,
சூலம் கைப்பிடித்து
கோவண ஆண்டியாய்
விடை(மாடு)ஏறி
ஒரு காலைத் தூக்கிக்கொண்டு
பேயோடு ஆடுகிறவன்
காட்டுமிரான்டியாய் இல்லாமல்
நகரவாசி – நாகரிகக்காரனாக
இருக்க முடியுமா ?
(விடுதலை – 18 -07-1956)

    என்று தந்தை பெரியார் எழுதியுள்ளதில் ஒரு கால் புள்ளியை மறுக்கத்தான் முடியுமா ? அப்படிப்பட்ட காட்டுமிராண்டிக் காலத்தில் எந்த அளவுக்கு அறிவு இருந்ததோ அந்த அளவுக்குத்தான் இது போன்ற குங்குமக் கதைகளைப் புனைந்திருப்பார்கள். புராணப் பிரசங்கிகள் என்ன கூறுகிறார்கள் ?

மலட்டு நிலத்தை மாத விலங்கான பெண்களைக் கொண்டு உழச் செய்யின், விளைச்சல் ஏற்படும் என்ற நம்பிக்கையும் ஒரு காலத்தில் நிலவியது. மாதவிலக்கு சினைப்படும் வளத்தை அறிமுகப்படுத்துவது என்பது உண்மையே! இச்சிற்ப்பை அறிவிக்கும் முகமாகவே புராதன காலத்தில் மாத விலக்கு வேளையில் ஏற்படும் இரத்த கசிவைத்திலகமாக நெற்றியில் பெண்கள் இட்டுத் தமது கருவளத்தைத் தெரிவித்து வந்தனர் என்பர். இன்னும் இவ்வழக்கம் குங்குமப் பொட்டாக பெண்கள் நெற்றியில் திகழ்வதைக் காண்கிறோம்.

(செ.கணேசலிங்கம் எழுதிய பெண்ணடிமை தீர…எனும் நூலிருந்து) எப்படி இருக்கிறது இந்து மதத்தின் ரசனையும் – புத்தியும்!

இப்பொழுது நெற்றியில் குங்குமம் வைத்துக்கொள்ளும் பெண்களுக்கு இந்த அய்தீகம் தெரியுமா என்றால். தெரியாது தான். உடுத்திக் கொள்ளும் உடை, செருப்பு இவற்றிற்குப் பொருத்தமாக(match) வண்ண வண்ணப் பொட்டுகளை நெற்றியில் வைத்துக் கொள்கின்றனர்.

இது குறித்த பிரபல தோல் நோய் வல்லுநர் மருத்துவர் தம்பையா கூறுவதைக் கவனிக்க வேண்டும்.

நாற்பது வருடத்துக்கு மேல் நான் ப்ராக்டீஸ் பண்றேன். 15 வருடங்களுக்கு முன்பிருந்துதான் குங்குமம், விபூதி அலர்ஜியாகிற பேண்டுகள் அதிகரிக்க ஆரம்பிச்சது. நவீன உலகத்தில் குங்குமத்தில் என்னென்ன கெமிக்கல்ஸ் கலக்கப்படுகின்றன. – இதனால் தோலில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. முதலில் குங்குமம், விபூதி இடுவதை நிறுத்தச் சொல்லிவிட்டு, பிறகு தான் சிகிச்சையைத் தொடங்குவேன் என்று பிரபல மருத்துவர் தம்பையா கூறியுள்ளார்.(ஜீனியர் விகடன். 26-10-1997) குங்குமக் கதை எதில் தொடங்கி எதில் முடிந்திருக்கிறது பார்த்தீர்களா?

**********************************

(உருவாக்கம் : கு.நீலகண்டன், தி.க. மாணவரணி, சித்தாத்திக்காடு கிளைக்கழகம் பேராவூரணி நகரம்)

வெளியீடு: திராவிடர் கழக இளைஞரணி, பட்டுக்கோட்டை மாவட்டம்.


திரு நீறு ! இந்து மதம் சொல்வது என்ன?



திரு நீறு பூசிக்கொள்வதற்கு புராணம் சொல்லும் கதை என்ன ?


வாதவூர் புராணம் பிரமோத்தா காண்டம் திருநீற்றீன் பெருமையை அடேயப்பா எப்படியெல்லாம் புகழ்ந்து தள்ளுகிறது. அதிக தூர்த்தனாக இருந்த ஒரு பிராமணன் ஒரு இராத்திரி. ஒரு புலை மாதுடன் வியபசாரம்(விபச்சாரம்) பண்ணிக் கொண்டிருக்கையில்,அம்மாதின் கணவன் கண்டு அத்துர்த்தனை வாளினால் வெட்டிக்கொன்று, வேளிக்கப்பால் எறித்தானாம்.

அந்நேரம் பசியால் வருந்தி குப்பைச் சாம்பலில் புரண்டிருந்த ஒரு நாய், அப்பிராமணப் பிணத்தைக்கண்டு அதன் மேல் எறி, மிதித்துக்கொண்டு தசையைக்கடித்து இழுத்துத் தின்றது.நாய் காலிலே ஒட்டிக்கொண்டிருந்த குப்பைச் சாம்பல் பிராமணப் பிணத்தின்மேல் படிந்ததால் சிவ கணங்கள் வந்து உபசரித்து, புட்ப விமானத்தில் ஏற்றுஞ் சமயம், பிராமணனின் தூர்த்த நடத்தைக்காக அவனைத் தண்டிக்க யம தூதர்கள் வந்து சேர, அவர்களை சிவகணங்கள்  விரட்டியத்துத் துரத்திவிட்டு,காமார்த்த பிராமணனை சிவலோகத்தில் கொண்டுபோய்ச் சேர்ந்தார்கள்.’’ – இதுதான்  திருநீற்றீன் மகிமை மாற்றான் மனைவியிடம் தவறாக நடந்து கொண்டவன் அந்தப் பார்ப்பான்.

செத்துப்போன அந்தப் பார்ப்பான் உடலை நாய் கிழித்துத் தின்றதாம். நாயின் கால்களில் ஒட்டிக்கொண்டிருந்த அந்தச் சாம்பல் சாதாரணமானது இல்லையாம் – அது திருநீறாம்.அந்தத் திருநீறு அந்த அயோக்கியனின் உடலில் பட்டால், அவன் செய்த பாவங்கள் தொலைந்து ஓடிப் போய்விட்டதாம்.யம தூதர்கள் நரத்துக்குக்கு கொண்டு போகத்தான் வந்திருப்பார்கள் அவர்களை சிவ கணங்கள் துரத்தியடித்தார்களாம்.

         பஞ்சமா பாவங்களைச் செய்தாலும் பாவமில்லை; பாவங்களைத் தீர்க்க மாட்டுச் சாணியாண சாம்பலை திருநீறையணிந்தால் போதும் என்ற எண்ணம் படிந்த நாட்டிலே ஒழுக்கத்துக்குத் தான் என்ன மரியாதை ?

ஆமாம், இந்த பீடிகை எதற்கு? காரணம் இல்லாமலா ? கொலைக் குற்றத்தின் கீழ் நடமாடிக் கொண்டிருக்கும் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதிக்கு நாடெங்கும் பவள விழாவாம் –ஜெயேந்தியாம் – அக்கிரகாரங்களில் அமோகமாக நடந்து கொண்டிருகிறது.
 
 சென்னை சீறிகிருஷ்ணகான சபாவில் அவருக்கு நடத்தப்பட்ட பவள விழா ஜெயேந்தியில் திருவாய் மலர்ந்துள்ளார். கேளுங்கள், கேளுங்கள் ! 

  நெற்றிக் குறியீடுகளான திருநீறு, திருநாமம் ஆகியவற்றிற்கு நம் தலையெழுத்தை மாற்றும் சக்தி உண்டு என்று உபதேசம் செய்துள்ளார்.(காமகொடி செப்டம்பர் 2010).நெற்றி வழிய சாம்பலை (திருநீறை) ஜெயந்திர சரஸ்வதி அணிவதன் மர்மம் நன்றாகவே புரிகிறது. சங்கரராமனை தீர்த்துக் கட்டினாலும் – அனுராதா ரமணின் மார்பங்களைப் பிடித்தாலும். அந்த பாவங்கள் எல்லாம் அவர் நெற்றித் திருநீற்றின் முன் எம்மாத்திரம் !            
                                                            
  ஒழுக்கக்கேட்டை உரம் போட்டு வளர்ப்பதற்காகவே ஒரு மதம் – பிராயச்சித்தங்கள் – திறுநீறு. கோபி சந்தனம், குங்குமம் !வெக்கக்கேடே உன் பெயர்தான் இந்து மதமா?

        நெற்றிக் குறுக்காக நீளவாட்டத்தில் பிரம்மா படைத்தது எதற்கு தெரியுமா ? இதுபற்றியெல்லாம் இந்த விஞ்ஞான ஆராய்ச்சி ஆசாமிகளுக்கு என்ன தெரியும் ?... தேவர்கள் முதலிய யாவரும் விபூதியைத்தரித்து மோட்சம் அடைய வேண்டும் என்ற கருத்தில் தான் அப்படி படைத்திருக்கிறான். சொல்லுவது சுப்பனோ,  குப்பனோ அல்ல அல்லவே அல்ல! கூர்மபுராணத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது ? ஸ்ருஷ்டா ஸ்ருஸ்டி சாஹர்தி புண்ட ரஸ்யாஸ் த தாம ஸஸர்ஜ சரிலாடம் ஹித்ரியத் கோர்த்துவம் நவர்த்துவம். ததாபி ரவைமூர்க்கா நகுர் வர்தித்ரி  புண்டரகம்.

“அதாவது பிரமா சிருஷ்டி தொடங்கும் போதே விபூதி மகிமை கூற, அதனை அணிந்து உயர்வதகாகவே சர்வ ஜனங்களின் நெற்றிகளையும் குறுக்கே ஆகர்தியாகப் படைத்தனர் – நெடுமையாகவேனும், வட்டமாகவேனும் படைத்திலர். அப்படியிருக்க சிலர் அவ்விபூதி திரிபுண்டா மணியாமல், தீவினை வயப்பட்டு உழலுகிறார்கள் என்று விளங்குவதால் அறியலாம்’’.

ஆக,நெற்றி இப்படி படைக்கப்பட்டுள்ளதே திருநீறு அணிவதற்காம்,சரி,இவர்கள் கூறும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களில் இன்னொரு பிரிவினர் திருநீறு பூசிக் கொள்ளாமல்,நாமம் தீட்டிக் கொள்கிறார்களே – அவர் அவர்கள் எல்லாம் பிரம்மாவின் கட்டளையை நிராகரிக்கக் கூடியவர்கள்தானா ? சிலர் சந்தனம் மட்டும் இட்டுக்கொள்கிறார்களே – அவர்களும் கூர்மப் புராண சங்கதியைக் குப்பைக் கூடையில் தூக்கி எறியக் கூடியவர்கள் தானா ? கிறித்தவர்களும், முசுலிம்களும், பகுத்தறிவாளர்களும் கோலம்,ஓவியம் போட்டுக் கொள்ளாமல் நெற்றியைச் சுத்தமாக வைத்துக்கொண்டு இருக்கிறார்களே – அவர்கள் எல்லாம் பிரம்மாவையே சீட்டுக் கிழிப்பவர்கள்தானா ? இதற்கெல்லாம் எங்கே பதில் சொல்லப் போகிறார்கள் ?

இப்படி எல்லாம் கேள்வி கேட்பார்கள் என்று தெரிந்து தான்  அரிவார்ந்த முறையில் பதில் சொல்ல வக்கில்லாமல், அச்சுறுத்தும் ஒரு வேலையில் இறங்கியிருக்கிறனர். திருநீறு அணியாத திருடகளே என்று விளிக்கப்படுகிறது. விலக்ஷ்ணானந்த சுவாமிகள் என்பார் இதற்காகவே செய்யுட்தொகை ஒன்றையும் எழுதியுள்ளார்.``வாயால், மனத்தால் அறியாத வாணாளாகும் திருநீற்றைப் , பேயே என மனம் பதைத்துப் பிதற்றுகின்ற பேதையரே !‘’ நாயாக, நரியாக வீயாதிருக்கும் திருநீற்றை விதமாய் அணிய வேண்டுவனெ!’’ இப்படியெல்லாம் சாபம் விடுகிறார்கள் இந்தச் சாம்பல் அணியும் பேர்வழிகள் !


(உருவாக்கம் : கு.நீலகண்டன், தி.க. மாணவரணி, சித்தாத்திக்காடு கிளைக்கழகம் பேராவூரணி நகரம்)

வெளியீடு: திராவிடர் கழக இளைஞரணி, பட்டுக்கோட்டை மாவட்டம்.

தமிழர்களே உங்கள் சூத்திரப் பட்டம் ஒழிய.....

  • கோவிலுக்கு போகாதீர்கள்!
  • நெற்றிக் குறிகளை இடாதீர்கள்!
  • மதப்பண்டிகைகளைக் கொண்டாடாதீர்
  • பார்ப்பானை பிராமணன் என்று அழையாதீர்!
                           --- பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் ---


(உருவாக்கம் : கு.நீலகண்டன், தி.க. மாணவரணி, பேராவூரணி நகரம்)

வெளியீடு: திராவிடர் கழக இளைஞரணி, பட்டுக்கோட்டை மாவட்டம்.

    Sunday, August 5, 2012

    மதமும் அறிவும்

    அறிவு வேறு, மதம் வேறு என்று பிரித்து விட வேண்டும்.  அறிவை உண்டாக்கி விட்டுப் பிறகு அந்த அறிவின் மூலம் மதத்தைக் கொள்ளும்படிச் செய்ய வேண்டும்.  அப்படிக் கில்லாமல் மதத்தைப் புகுத்தி அதன் மூலம் அறிவை வளர விடாமல் செய்து விட்டால் சுதந்தர ஞானம் எப்படி ஏற்படும்?

    (27-09-1931 "குடி அரசு" பக்கம் 14) பெரியார் புரட்சிப் பூக்கள் புத்தகத்திலிருந்து..

    மதத்தால் வரும் கேடு

    மதத்திற்கும், உலக இயற்கைக்கும் எப்போதுமே சம்பந்தம் இருப்பதில்லை.  ஏனெனில், அனேகமான எல்லா மதங்களுமே உலக இயற்கை மீது ஆதிக்கம் செலுத்தி அதை வழி மறித்துக் கண்மூடித்தனமான செயற்கையில் திருப்புவதையே ஜீவநாடியாய்க் கொண்டிருக்கிறது.  அதனால் மதம் கலந்த படிப்பால் இயற்கை அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் இடமளிக்காமலே போய் விடுகின்றது.

    (27-09-1931 "குடி அரசு" பக்கம் 8), பெரியார் புரட்சிப் பூக்கள் புத்தகத்திலிருந்து..

    வலைப்பூவின் நோக்கம்

    பகுத்தறிவு பகலவன் தந்தைப் பெரியாரின் கருத்துக்களையும், கொள்கைகளையும் இந்த வலைப்பூவின் மூலம் இணையத்தின் வாயிலாக உலகமெங்கும் உள்ள மக்களுக்கும், திராவிட சமுதாயத்திற்கும் கொண்டு செல்வது.

    திராவிடர் கழகத்தின் விடுதலை இதழ் இணையத்தில் மிகவும் அருமையாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.  விடுதலை செய்த சாதனைகள் எத்தனையெத்தனையோ சொல்லி மாளாது.

    விடுதலையில் சொல்லி விட்டாத கருத்துக்களை நான் இங்கு சொல்லிவிடப் போவதில்லை, இருந்தாலும் பெரியாரால் பயனடைந்த ஒரு திராவிடச் சமுத்தாயத்தில் பிறந்த மாணவன் என்ற முறையில் ஒரு நன்றிக்கடனுக்காக இந்த வலைப்பூவை உருவாக்கியுள்ளேன்.