- எட்டு வயதில் ஈரோட்டுப் பாதையில் அடியெடுத்து வைத்தவர்.
- அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதல் மாணவராய்த் திகழ்ந்து தங்கப்பதக்கம் வென்றவர்.
- இருதய அறுவை சிகிச்சைக்குப் பிறகும் ஓய்வு உறக்கமின்றி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குப் போராட, சமுக நீதிக்கு வாதாட வழக்கறிஞர்-எழுத்தாளர்-பேச்சாளர்-கருத்தாளர் எனக் களம் காண்பவர்.
- இட ஒதுக்கீட்டில் ரூ.9000 வருமான வரம்பு கூடாது எனப் போராடி வென்றவர்.
- பிற்படுத்தப்பட்டோருக்கான 31 சதவித இட ஒதுக்கீட்டை 50 சதவிகிதமாக உயர்த்திய அரசு உத்தரவிற்கு மூல காரணமானவர்.
- 69 சதவீகித இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து வந்தபோது 31-சி பிரிவின் கீழ் சமூக நீதிக்காக சிறப்பு தனிச் சட்டத்தினை (Tamilnadu Govt. special Act) தமிழக அரசுக்கு வகுத்துக்கொடுத்து சமூக நீதியைப் பாதுக்காத்தவர்.
- இந்திய அரசு மண்டல்குழு பரிந்துரையை ஏற்கச் செய்திட 16 போராட்டங்களையும் 42 மாநாடுகளையும் நாடுதழுவிய அளவில் நடத்தி மத்திய அரசில் சமுக நீதியை நிலை நாட்டியவர்.
- கொள்கை ரீதியாக எதிர்க்கும் எதிரியும், துரோகியும் கூட குறைசொல்ல முடியாத ஒழுக்கமும், நாணயமும் மிக்க ஒரே தலைவர்.
- தான் சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டு தனது பிள்ளைகளுக்கும் சாதி மறுப்பு – மத மறுப்புத் திருமணங்ளை செய்து வைத்து சாதி ஒழிப்புப் போருக்கு தகுதியோடு தலைமையேற்பவர்.
- தழிழர் நலம் காக்க 43 கல்வி அறப்பணி நிறுவனங்கள், குழந்தைகள் இல்லம், முதியோர் இல்லம், இலவச மருத்துவ மனைகள் நடத்தி வரும் தொண்டறச்செம்மல்.
- ஓராண்டு மிசாக்கொடுமை உட்பட 47 முறை சிறை சென்று தமிழர் உரிமை காக்க – மானம் மீட்கப் போராடும் மகத்தான தலைவர்.
- தனக்கு மாலைக்குப் பதிலாக வழங்கப்பட்ட நிதி, எடைக்கு எடை வழங்கப்பட்ட வெள்ளி ஆகியவற்றைக்கொண்டு பெரியார் நகர்வுப் புத்தகசந்தை எனும் பேருந்து, பிரச்சார வேண்களாக்கி தந்தை பெரியாரின் கருத்துகள் அடங்கிய புத்தகங்கள் தமிழகமெங்கும் எளிதாகக் கிடைத்திட செய்திட்ட ஏந்தல்.
- தனக்கு எடைக்கு எடை வழங்கப்பட்ட தங்கம் முழுவதையும் இயக்கத்திற்கே வழங்கிய தன்நல மறுப்பாளர்.
- காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தால் டாக்டர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்ட தலைவர்.
- புதுடெல்லியில் இரண்டு பெரியார் மையம் கண்ட பேரறிவாளர்
- அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக்க பல்வேறு போராட்டங்களை நடத்தி வென்ற தலைவர்.
- உலக நாத்திக மையத்தின் துணைத் தலைவராக பொறுப்பேற்று உலகின் பல்வேறு நாடுகளில் தந்தை பெரியாரின் கொள்கைகளை பரப்பி வரும் தொண்டறச்செம்மல்.
- 78 அகவையில் 70 ஆண்டு பொதுவாழ்வு எனும் யாரும் உடைக்க முடியாத உலக சாதனையைப் படைத்து அன்று முதல் இன்று வரை ஒரே கொள்கை,
ஒரே கொடி, ஒரே தலைவர் என வாழும் ஒரே தலைவர்
**************************************************************************
வெளியீடு: ஒன்றிய, நகர திராவிடர் கழகம், பேராவூரணி-சேதுபாவாசத்திரம்
ஆக்க உதவி: மானமிகு கு.நீலகண்டன், தி.க. மாணவரணி, சித்தாதிக்காடு கிளைக்கழகம்.
வெளியீடு: ஒன்றிய, நகர திராவிடர் கழகம், பேராவூரணி-சேதுபாவாசத்திரம்
ஆக்க உதவி: மானமிகு கு.நீலகண்டன், தி.க. மாணவரணி, சித்தாதிக்காடு கிளைக்கழகம்.

No comments:
Post a Comment
தங்களின் கருத்துக்களை வரவேற்கிறேன்.... அறிவு நாணயத்தோடு கேள்விகளும், கருத்துக்களும் இருக்கவேண்டும்.