Friday, September 28, 2012

விநாயகரின் சதுர்த்தி கொண்டாடும் பக்தர்களின் சிந்தனைக்கு !


கடவுள்களில் முதன்மை பெற்றதும், மக்களிடம் மிக செல்வாக்குப் பெற்றதும், இந்துக்கள் என்போர்களில் ஏறக்குறைய எல்லோராலும் ஒப்புக்கொண்டு வணங்கப்படுவதுமான கடவுள் பிள்ளையார் என்பது.  இதனை கணபதி என்றும், விநாயகன் என்றும், விக்கினேஸ்வரன் என்னும் இன்னும் இது போன்ற பல் நூற்றுக்கணக்கான பெயர்களைச் சொல்லி அழைப்பது உண்டு.

நிற்க, இந்தப் பிள்ளையார் என்னும் கடவுளை இந்துக்கள் என்பவர்கள் தங்களுடைய எந்தக் காரியத்திலும் முதன்மையாய் வைத்து வணங்குவதும், கடவுள்களுக்கெல்லாம் முதற் கடவுளாக வணங்குவதுமாக இப்போது அமலில் இருக்கும் வழக்கத்தை எந்த இந்து என்பவனும் மறுக்க முடியாது.  ஆகவே, இப்படிப்பட்டதான யாவராலும் ஒப்புக் கொள்ளக்கூடியதும், அதிக செல்வாக்குள்ளதும், முதற்கடவுள் என்பதுமான பிள்ளையாரின் சங்கதியைச் சற்று கவனிப்போம்.

----------------------------------------------------------------------------------------------
ஒரு வாகனம், குறைந்தது ஸ்கூட்டர் உயரம் இருந்தால் தானே வாகனத்தின் இரண்டு பக்கமும் காலைத் தொங்கவிட முடியும்? பயணம் செய்ய முடியும்? அப்படி இல்லாமல் ஆறு அங்குலம் மட்டுமே உயரமுள்ள எலியாக இருந்தால் எப்படி அமர்ந்து பயணம் செய்ய முடியும் ? இப்படித்தானே அமர முடியு ம்?

யானைத் தலையும் தொப்பை வயிறும் இருப்பதாகச் சொல்லப்படும் உருவம், சின்னஞ் சிறிய மூஞ்சூறு எலியின் மேல் அமர்ந்தால் எலி நசுங்கிவிடாதா?

5-அறிவு போதும் என்று திரியும் நபர்கள் இந்த ஆதிவாசி கதைகளை நம்பட்டும். 6-வது அறிவைப் பயன்படுத்தி வாழும் நாகரிக மனிதராகிய நீங்களும் இதை நம்பலாமா?
---------------------------------------------------------------------------------------------

அழுக்குருண்டைப் பிள்ளையார்!

1.  ஒரு நாள் சிவனின் பெண்சாதியான பார்வதி தேவி, தான் குளிக்கப் போகையில், குளிக்குமிடத்துக்கு வேறு ஒருவரும் வராமல் இருக்கும்படியாக ஒரு காவல் ஏற்படுத்துவதற்காக தனது உடலில் இருந்த அழுக்கைத் திரட்டி உருட்டி அதை ஓர் ஆண் பிள்ளையாகும்படி கீழே போட்டதாகவும், அது உடனே ஆண் குழந்தையாகி விட்டதாகவும், அந்த ஆண்குழந்தையைப்  பார்த்து - நான் குளித்து விட்டு வெளியில் வரும் வரை யாரையும் உள்ளே விடாதே என்று சொல்லி அதை வாயிலில் காவலாக உட்கார வைத்ததாகவும், அந்தச் சமயத்தில் பார்வதியின் புருஷனாகிய பரமசிவன் வீட்டுக்குள் புகுந்ததாகவும் அழுக்குருண்டையான வாயிற் காக்கும் பிள்ளையார் அந்தப் பரமசிவனைப் பார்த்து, பார்வதி குளித்துக் கொண்டிருப்பதால் உள்ளே போகக் கூடாது என்று தடுத்ததாகவும், அதனால், பரமசிவக் கடவுளுக்கு கோபம் ஏற்பட்டு தன் கையிலிருந்த வாளாயுதத்தால் ஒரே வீச்சாக அந்தப் பிள்ளையார் தலையை வெட்டிக் கீழே தள்ளி விட்டு குளிக்குமிடத்த்ற்குள் போனதாகவும், பார்வதி பரமசிவனைப் பார்த்து, காவல் வைந்திருந்தும் எப்படி உள்ளே வந்தாய்? என்று கேட்டதாகவும், அதற்கு சிவன், காவற்காரன் தலையை வெட்டி உருட்டிவிட்டு வந்தேன் என்று சொன்னதாகவும் , இத் கேட்ட பார்வதி , தான் உண்டாக்கின குழந்தை வெட்டுண்டதற்காகப் புரண்டு, புரண்டு அழுததாகவும் , சிவன் பார்வதியின் துக்கத்தை தனிக்க வேண்டி, வெட்டுண்டு கீழே விழுந்த தலையை எடுத்து மறுபடியும் ஒட்ட வைத்து உயிர் கொடுக்கலாம் எனக் கருதி உடனே வெளியில் வந்து பார்க்க, வெட்டுண்ட தலையை காணாமல் போனதால் , அருகிலிருந்த ஒரு யானையின் தலையினை வெட்டி முண்டமாகக் கிடந்த குழந்தையின் கழுத்தில் ஒட்ட வைத்து, அதற்கு உயிரைக் கொடுத்து பார்வதியைத் திருப்தி செய்ததாகவும் கதை சொல்லப்படுகின்றது.  இக்கதைக்கு சிவ புராணத்திலும் ஆதாரங்களும் இருக்கின்றனவாம்.

எத்தனை, எத்தனை கட்டுக் கதைகள்?

2. ஒரு காட்டில் ஆண், பெண் யானைகள் கலவி செய்யும் போது சிவனும் - பார்வதியும் கண்டு கலவி நினைவு ஏற்பட்டுக் கலந்ததால், யானை முகத்துடன் குழந்தை பிறந்தது என்றும் பிள்ளையார் கதையில் கூறுகின்றதாம்.

3. பார்வதி கர்ப்பத்தில் ஒரு கருவுற்றிருக்கையில் ஒரு அசுரன்  அக்கருப்பைக்குள் காற்றுவடிவமாகச் சென்று அக்கருச் சிசுவின் தலையை வெட்டி விட்டு வந்ததாகவும் , அதற்கு ப்ரிகாரமாகப் பார்வதி யானையின் தலையை உயிர் உண்டாக்கிக் குழந்தையாகப் பெற்றுக் கொண்டதாகவும் விநாயகர் புராணம் கூறுகின்றதாம்.

4.தக்கனுடைய யாகத்தை அழிப்பதற்காக சிவன் தனது மூத்த குமாரனாகிய கணபதியை அனுப்பியதாகவும், தக்கன் கணபதியின் தலையை வெட்டி விட்டதாகவும், சிவன் தனது இரண்டாவது பிள்ளையாகிய சுப்பிரமணியனை அனுப்பியதாகவும், போய்ப் பார்த்ததில் தலை காணப்படாமல் வெறும் முண்டமாய்க் கிடந்ததாகவும், உடனே ஒரு யானையின் தலையை வெட்டி வைத்து உயிர்ப்பித்ததாகவும் மற்றொரு கதை சொல்லப்படுகின்றது. இது தக்கயாகப்பரணி என்னும் புத்தகத்தில் இருக்கின்றதாம்.

எனவே, பிள்ளையார் எனும் கடவுள் சிவனுக்கோ, பார்வதிக்கோ மகனாகப் பிரசவிக்கப்பட்டவர் என்பதும், அந்தப் பிள்ளையாருக்கு யானைத் தலை செயற்கையால் ஏற்பட்டது என்பதும் ஒப்புக்கொள்ளப்பட வேண்டிய விஷயமாகும்.

கடவுள் கூட்டத்தின் முதல்வரான பிள்ளையார் சங்கதியே இப்படிப் பலவிதமாகச் சொல்லப்படுவதும், அவைகளிலும் எல்லாவிதத்திலும் அவர் பிறரால் உண்டாக்கப்பட்டதாகவும், பிறப்பு, வளர்ப்பு உடையவராகவும் ஏற்படுவதுமானதாயிருந்தால், மற்றக் கடவுள்கள், சங்கதியைப் பற்றி யோசிக்க வேண்டுமா? நிற்க,


ஒரு கடவுளுக்கு தாய், தகப்பன் ஏற்பட்டால், அந்தத் தாய், தகப்பன்களான கடவுள்களுக்கும் தாய் தகப்பன்கள் ஏற்பட்டுத்தானே தீரும்? (இவைகளைப் பார்க்கும் போது, கடவுள்கள்கள் தாமாக ஏற்பட்டவர்கள் என்றால் எப்படிக் ஒப்புக் கொள்ள முடியும்?) ஆகவே, இந்தக் கடவுள்களும், உலகமும் ஏற்பட்டதற்கு வேறு ஆதாரங்களை கண்டுபிடிக்க வேண்டியதாயிருக்கின்றது.

இந்தக் கதைகள் அறிவுக்குப் பொருந்துமா?


இந்த வெட்டப்பட்ட சிறுவனின் தலையில்லாத முண்டத்தில் யானையின் தலையை வெட்டி பொருத்த முடியுமா? யானையின் மிகப்பெரிய தலை அகலமும் , மனிதனின் கழுத்து அகலமும் கொஞ்சமாவது பொருந்துமா?

கடவுளைப் பற்றிய விவரங்களோ சந்தேகங்களோ ஏற்படும் போது மாத்திரம் கடவுள் ஒருவர்தான்; அவர் நாம, ரூப, குணமற்றவர்; ஆதி அந்தமற்றவர்; பிறப்பு இறப்பு அற்றவர்; தானாகவே உண்டானவர் என்று சொல்லுவதும், மற்றும் அது ஒரு சக்தி என்றும் கூறுவதும், ஒரு தன்மை அல்லது குணம் என்றும் பேசி அந்தச் சமயத்தில் மாத்திரம் தப்பித்துக்கொண்டு பிறகு இம்மாதிரி கடவுள்களைக் கோடி கோடியா உண்டாக்கி, அவைகளுக்கு இதுபோன்ற பல ஆபாசக் கதைகளை வண்டி வண்டியாககக் கற்பித்து, அவற்றையெல்லாம் மக்கள் நம்பவும், வணங்கவும் பூசை செய்யவும், உற்சவம் முதலியன செய்யவும், செய்வதில் எவ்வளவு அறியாமையும் , புரட்டும், கஷ்டமும் இருக்கின்றது என்பதை வாசகர்கள்தான் உணரவேண்டும்.

ஆண் யானையும்[சிவன்], பெண் யானையும்[பார்வதி] புணர்ந்து பெற்ற பிள்ளைதான் விநாயகராம்! வெட்கக் கேடு!

உதாரணமா, ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகின்றோம்; சிதம்பரம் கோயிலில் யானை முகங்கொண்ட ஒரு பிள்ளையார் சிலை செய்து, அதன் தும்பிக்கையை மற்றொரு பெண் சிலையின் பெண்குறிக்குள் புகவிட்டு, இக்காட்சிக்குத் தினமும் முறைப்படி பூஜையும் நடந்து வருகிறது.  பல ஆண் பெண் பக்தர்கள் அதைத் தரிசித்து கும்பிட்டும் வருகிறார்கள்.


சில தேர்களிலும், ஒரு பிள்ளையார் உருவம் தனது துதிக்கையை ஒரு பெண் உருவத்தில் பெண் குறியில் புகுத்தி அந்தப் பெண்ணைத் தூக்கிக் கொண்டிருப்பது போலவும், அந்தப் பெண் இரண்டு காலையும் அகட்டிக் கொண்டு அந்தரத்தில் நிற்பது போலவும் செதுக்கப்பட்டிருக்கிறது.  இவைகளைப் பார்த்த யாராவது, இது என்ன ஆபாசம் என்று கேட்டால், இவைகளுக்கு ஒரு கதையும் ஒரு புராணமும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அதாவது, ஏதோ ஒரு அரசனுடன் மற்றொரு கடவுள் யுத்தம் செய்ததாகவும், அந்த யுத்தத்தில் தோன்றிய அந்தக்கடவுள் கொன்று கொண்டே வந்தும்,
தன்னால் முடியாத அளவு சூரர்கள் அசுர ஸ்திரியின் பெண் குறியிலிருந்து, ஈசல் புற்றிலிருந்து ஈசல்கள் புறப்படுவது போல பல லட்சக்கணக்காக வந்து கொண்டேயிருந்ததாகவும், இதையறிந்த அந்தக் கடவுள் பிள்ளையார் கடவுளின் உதவியை வேண்டியதாகவும், உடனே பிள்ளையாரனவர், ஈசல் புற்றிலிருந்து கரடி ஈசல்களை உறிஞ்சுவது போல், தனது தும்பிக்கையை அந்தப் ஸ்திரீயின் பெண் குறிக்குள் விட்டு அங்கிருந்த அசுரர்களையெல்லாம் ஒரே உறிஞ்சாக உறிஞ்சி விட்டதாகச் சொல்லப்படுகின்றது. எனவே இம்மாதிரியான காட்டு மிராண்டித்தன்மையான ஆபாசங்களுக்கு, கண்டவைகளையெல்லாம் கடவுள் என்று சொல்லும் ஆஸ்திகர்கள் என்ன பதில் சொல்லக்கூடும் என்று கேட்கிறோம்.

எவனோ ஒருவன் ஒருகாலத்தில் இப்படி எழுதி விட்டான் என்று பொறுப்பில்லாமல்.சொல்லிவிட்டால் போதுமா? இன்றைய தினமும் அவ்வெழுத்துக் கொண்ட ஆதாரங்கள் போற்றப்படவில்லையா? அன்றியும், பல கோயில்களில் உருவாரங்களாய்த் தோன்றவில்லையா? இதை எவனோ ஒருவன் செய்துவிட்டான் என்று சொல்லுவதானால், இவைகளுக்குத் தினமும் பெண்டு, பிள்ளை வாகனம் முதலியவைகளுடன் பூஜைகள் நடக்கவில்லையா? என்பது போன்றவைகளைச் சற்று யோசித்துப் பார்க்கும் படி வாசகர்களை வேண்டிக் கொள்கிறோம்.

 சிறுவன் முண்டத்தில் யானையின் நீண்ட தும்பிக்கையைப் பொருத்தினால் இப்படித்தானே தும்பிக்கை தரையில் புரளும் !!! 

இப்படி கச்சிதமாக தலைபொருந்தியபடி இருக்கும் என்பது பொய்தானே!  பிள்ளையார் உருவம் ஏமாற்று மோசடி அல்லவா?

சீர்திருத்தக்காரர்கள் அப்படி இருக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும் என்றும் மதத்திற்கு ஆபத்து; சமயத்திற்கு ஆபத்து, கடவுளையும் காப்பாற்றவென்று அவைகளிடம் வக்காலத்து பெற்று மற்ற மக்கள் துணையைக் கோரும் வீரர்கள் யாராவது இதுவரை இந்த ஆபாசங்களை விலக்க முன் வந்தார்களா? என்று கேட்கின்றோம்.

இவற்றையெல்லாம் பற்றி எந்த ஆஸ்திக சிகாமணிகளுக்கும் ஒரு சிறிது கவலையில்லா விட்டாலும், பிள்ளையார் சதுர்த்தி என்கிற உற்சவம் என்றைக்கு என்பதில் மாத்திரம் விவாதத்துக்கும், ஆராய்ச்சிக்கும், குறைவில்லை என்று சொல்வதோடு, இந்த ஆபாசங்களையெல்லாம் ஒழிக்க முயற்சிக்காமல், சும்மா இருந்து கொண்டும், இவ்வாபாசங்களைப் பிரசங்கம் பண்ணிக் கொண்டு இருந்துவிட்டு, இதை எடுத்துச் சொல்பவர்களை நாஸ்திகர்கள் என்று சொல்லிவிடுவதாலையே எந்தக் கடவுளையும், எந்தச் சமயத்தையும் காப்பாற்றிவிட முடியாது என்றே சொல்லலாம்.

--தந்தை பெரியார்--
(குடிஅரசு -26.08.1928)

சிந்திப்பீர்! தேவையா இவ்வளவு கேடுகள்.....

Wednesday, September 19, 2012

தந்தை பெரியாரின் 134-வது பிறந்த நாள் விழா - பேராவூரணியில்

ஆப்பிள் கருவிகளில் 'விடுதலை' நாளிதழ் - உலகின் ஒரே தினசரி பகுத்தறிவு, நாத்திக நாளேடு


தந்தை பெரியார் 134-ஆம் ஆண்டு பிறந்தநாள் (17.09.2012) முதல் உலகமெங்கும் ஆப்பிள் கருவிகளில் 'விடுதலை' நாளிதழ்.

மதவாதிகள் அறிவியல் கண்டுபிடிப்புகளை மக்களிடம் தன்  மதம் தொடர்பான செய்திகளை கொண்டு செல்ல பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்.

அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை அது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  உதாரணமாக.

தொலைக்காட்சிகளில்,  இந்து மத  சாமியார்கள் தனி தொலைக்காட்சி அலைவரிசை வைத்திருக்கின்றனர்., அது மட்டுமில்லாமல் காலை 11 மணி வரையில் வெவ்வேறு நேரங்களில் ராசி பலன் சொல்வது, ஆலய தரிசனம், முட்டாள்களின் உளரலான பகவத் கீதையினை படித்து சொல்வது , ( வெளக்கம் சொல்ற அளவுக்கு அதுல அப்படி என்ன கருமம் இருக்கோ தெரியவில்லை, ), ஏதாவது ஒரு கோவிலை எடுத்துக்கொண்டு அதற்கான தல புராணம் சொல்வது இது போன்று பல கொடுமையான, முட்டாள்தனமான நிகழ்ச்சிகள்.

இதுதான் இப்படியென்றால் நட்சத்திரக் கல் , பாதம் , மந்திரக் கல் இதுபோன்ற பொருட்களை வாங்குங்கள் என்று வேறு ஒரு மணி நேரத்திற்கு குறையாமல் விளம்பரம் தனியாக வேறு.

வானொலியினை எடுத்துக்கொண்டால் காலையில் பக்திப் பாடல்.
நாளிதழ்களை எடுத்துக்கொண்டால் தினசரி ராசிபலன், ஆன்மிக மலர், பக்தி மலர், தெய்வீக மலர் என தனித்தனி இணைப்புகள்.

கணினியினை எடுத்துக்கொண்டால் , கணினி எப்படியொரு அற்புதமான தொரு கண்டுபிடிப்பு அதையும்  ஜாதகம் பார்க்க பயன்படுத்துவது அதற்கென தனி மென்பொருள் வேறு.

இணையத்தை எடுத்துக்கொண்டால் சொல்லவே வேண்டாம் பக்தி, மதம் தொடர்பான கடைச்சரக்குகளை நன்றாகவே வேகவைத்து அரும்பாடு பட்டு விற்றுக்கொண்டிருக்கின்றனர்.  அப்படி விற்ற ஒரு செய்திதான் சனிபெயர்ச்சி அன்று செயற்கைகோள்களெல்லாம் ஸ்தம்பித்து நின்றது என்ற செய்தி.  இன்னும் பல...

அச்சு இயந்திரங்களை எடுத்துக்கொண்டால் பஞ்சாங்கம், ஆன்மிக மலர், தின மலர் போன்ற அனைத்தையும் அச்சடிக்க பயன்படுத்துகின்றனர்.

இதுபோல சொல்லிக்கொண்டே போகலாம்...

இப்படியிருக்கும் இந்த சூழ்நிலையில் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தினால்  'விடுதலை'  நாளிதழ் ஆப்பிள் கருவிகளில் பயன்படுத்தும் வண்ணம் மென்பொருள் உருவாக்கி வெளியிடப்பட்டுள்ளது. மிகவும் மகிழ்ச்சியடைய வேண்டிய ஒரு செய்தி.

கைப்பேசி பயன்படுத்தும் அனைவரும் 'News Hunt' என்ற ஒரு மென்பொருளை நாளிதழ்கள் படிக்க பயன்படுத்துவோம்.  அதில் இருக்கும் தமிழ் நாளிதழ்கள் இரண்டுமே பார்ப்பன நாளிதழ்கள் (தினமணி(இனமணி), தினமலர் (தினமலம்)).  ஆங்கில நாளிதழ்களும் பார்ப்பன நாளிதழ்கள்தான் (The Hindu, Indian Express).

ஆகையால்,

Nokia, Android, போன்ற கருவிகளில் பயன்படுத்தும் வண்ணம் .jar மற்றும் .Android App மென்பொருளாகவும் வெளியிட்டால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்.

அறிவியல் கண்டுபிடிப்புகளையும், கருவிகளையும் மனித சமுதாய முன்னேற்றத்திற்கு பயன்படுத்தாத எந்த நாடும் முன்னேறியதாக வரலாறு இல்லை.   ஆகையால் அறிவியல கண்டுபிடிப்புகளை, கருவிகளை முன்னேற்றத்திற்கும் அறிவு வளர்ச்சிக்கும் பயன்படுத்துவோம்.  

வதந்திகளைப் பரப்புவது, மதச்சண்டைகளை உருவாக்கும் விதத்தில் குறுஞ்செய்திகள் அனுப்புவது போன்ற செயல்களைத் தவிர்ப்போம்.

**********************************
வாழ்க பெரியார் ! வளர்க பகுத்தறிவு !!  உலகமயமாகட்டும் பெரியாரின் கொள்கை !!!
வாழ்க பெரியாரினை உலகமயமாக்கிய தலைவர் ஆசிரியர் வீரமணி 
**********************************


Thursday, September 13, 2012

தோழர்களே, இளைஞர்களே, புரட்சிகர மாணவர்களே...

உலகத்தின் மிகப்பழமையான இரண்டு சுரண்டல் தொழில்களான மதம், அரசியல் என்ற இரண்டிலும்  சுரண்டல் தளபதிகளான மதவாதிகளும் அரசியல் வாதிகளும் இளைஞர்களுக்கு வலைவிரித்து பசப்பு மொழிகளால் பாச வார்த்தைகளால் பொய்யை அதிகாரப்பூர்வமாக பரப்பி மனித சமூகத்தை பாழ்படுத்தி வரும்  இவ்விரண்டு தொழிகளும் சில மகத்தான பொய்யர்களை தலைவர்களாகப் பெற்று இன்று இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கின்றனர்.

கொடிதூக்கு, கொள்கைப் பரப்பு, என்னைத் தலைவனாக்கு கிறித்தவனை அழி, முஸ்லீமை வெட்டு என்னை மடாதிப்பதியாக்கு ஜகத்குருவாக்கு என்று சொலிறார்கள்.  சக மனிதர்களைக் கொன்று குவித்து அந்த பிண மேடையில் இவர்கள்  கோலோச்ச இளைஞர்கள் தோள் கொடுக்க துணைநிற்க, போராட கொள்கைப் பரப்ப வேண்டுமாம்,

நீங்கள் சிந்தியுங்கள் என்று எவன் சொல்லவில்லையோ அவன் அயோக்கியன்.

அறிவுக்கு பணிய்யாற்றுங்கள் என்று எவன் வாதிடவில்லையோ அவன் திருடன்.

மனித இன மேம்பாட்டிற்கு பாடுபடுங்கள் என்று எவன் அழைக்கவில்லையோ அவன் துரோகி.

இளமை துடிப்பை செயல் வேகத்தை மதவாதியின் காலடியில் சமர்பிப்பதைவிட, அரசியல் வாதியின் பித்தலாட்டங்களுக்கு பலியிடுவதைவிட அறிவு பணிக்கு அற்பணிக்க வாருங்கள். 

தோழர்களே இளைஞர்களே, புரட்சிகர மாணவர்களே....என்று நாங்கள் அழைக்காமல்

சாந்தி செய், சடங்கு செய், யாத்திரை செய் , பூஜை செய், பிரார்த்தனை செய், பார்ப்பானுக்கு தானம் செய் என்று கூறுபவர்களா இதைச் செய்வார்கள்......?

Sunday, September 9, 2012

ஐயா பகுத்தறிவு பகலவன் தந்தைப் பெரியாரின் 134-வது பிறந்த நாள் விழாவிற்கான கலந்துரையாடல் கூட்டம்

கடவுளை மற ! மனிதனை நினை !! | மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு | சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு

கடந்த வெள்ளிகிழமை 07.09.2012 அன்று ஐயா பகுத்தறிவு பகலவன் தந்தைப் பெரியாரின் 134-வது பிறந்த நாள் விழாவினையொட்டி பேராவூரணி-சேதுபாவாசத்திரம் ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் பேராவூரணி பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது.

திராவிடர் கழகத்தின் தோழர்கள் கலந்துக்கொண்டு ஐயாவின் பிறந்த நாள் விழாவினை சிறப்பிப்பது தொடர்பான கருத்துக்களை எடுத்துக்கூறினர்.

அரு. நல்லதம்பி ஐயா அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.  அண்ணன் சிதம்பரம் அவர்கள் தொடக்கவுரை மற்றும் பல்வேறு தகவல்களைக் கூறி உற்சாகமூட்டி உரையாற்றினார்.

சோம.நீலகண்டன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.  கலந்துரையாடல் கூட்டம் இனிதே நிறைவுப்பெற்றது.

அரு.நல்லதம்பி ஐயா அவர்கள் பேசியபொழுது, அருகில் அண்ணன் சிதம்பரம் அவர்கள்

சோம.நீலகண்டன், பெரியாராசன்,  தோழர் லெ.க.நீலகண்டன் பி.இ., ஆகியோர்

சோம.நீலகண்டன், ரவி, சந்திரமோகன் ஆகியோர்

அரு.நல்லதம்பி அவர்களின் உரையினை தோழர்கள் கவனித்துக் கேட்கின்றனர்.