அய்யப்பன்
சபரிமலைப் பகுதியிலுள்ள
பம்பா என்னும் ஆற்றங்கரையில்
சிறு குழந்தைப் பருவத்தில்
கண்டெடுக்கப்பட்டான்.
காட்டுக்கு
வேட்டைக்குச் சென்றவர்கள்
குழந்தையை கண்டெடுத்து
'புத்திரப்பாக்கியம்'
இல்லாத
தமது அரசனிடம் சேர்ந்தனர்.
அரசன்
குழந்தையைச் சீராட்டி
வளர்த்தான். மணிகண்டன்
என்று பெயரிட்டான்.
இதற்கிடையில்
அரசன் மனைவி கருவுற்று ஓர்
ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.
இருவரும்
வளர்ந்து பெரியவர்களானா
பிறகு இளவரசுப் பட்டம்
யாருக்கென்று சர்ச்சை
எழுத்தபோது, ராணி
தன் வயிற்றுப் பிள்ளைகேதான்
இளவரசுப் பட்டம் தர வேண்டும்
என்றாள். வேறு
வழியின்றி மணிகண்டன் தான்
பிறந்த காட்டுக்கே தோழர்களோடு
சென்று விட்டான். நாளடைவில்
இந்த கூட்டம் மணிகண்டன்
தலைமையில் கொள்ளைக் கூட்டமாக
உருவெடுத்தது; வழிப்பறியில்
தீவிரமாக ஈடுபட்டனர்.
சுற்றுப்புறங்களில்
இவர்கள் கொள்ளை அடிக்கச்
சென்றபோது மணிகண்டனைக் கண்ட
பொதுமக்கள் 'அய்யோ
அப்பா' என்று
கூச்சல் போட்டனர். அந்தக்
கூச்சலே நாளடைவில் அவனுக்குப்
பெயராகிவிட்டது. இரவில்
திருடச் செல்லவும்,
காட்டில்
மறைந்து வாழவும். கறுப்பு
உடைகளை மேலும் கீழும் அணிந்து
கொண்டனர். ஆளுக்கொரு
தீப்பந்தமும் தடியும் வைத்துக்
கொண்டனர்.
கொள்ளைக்
கூட்டத் தலைவரான அய்யப்பன்
முதுமை அடைந்து நோயால்
மாண்டான். உடனே
அவனது கூட்டாளிகள் அவனுக்கு
மலை உச்சியில் நடுகல் நட்டுக்
கோயிலும் எழுப்பினர்.
அந்தக்
கோயிலுக்குச் செல்ல 18-படிகளும்
வெட்டி வைத்தனர்.
அய்யப்பனின்
முன்னோடியாக இருந்த 'கருப்பு'
என்பவன்
மாண்டதும், அந்தப்
படிக்கட்டுக்குப் பக்கத்தில்
புதைத்து "பதினெட்டாம்
படிக் கருப்பு" அவனையும்
ஒரு 'தெய்வ'
மாக்கினர்.
மலைவாசிகள்
இறந்தவர்களைப் புதைத்து
அங்கே கல் நட்டு ஆண்டுக்கு
ஒரு முறை படையல் போட்டு,
ஆடிக்களிப்பது
வழக்கம். இந்த
முறையிலேயே அமைந்ததுதான்
இந்த அய்யப்பன் கோயிலும் ,
பூசையும்!
இப்படியொரு
கர்ண பரம்பரைச் செய்தி!
அய்யப்பனைப்
பற்றிய புராணப் புளுகு!
அய்யப்பன்
பிறப்பைப்பற்றிய ஒரு புராண
கதையும் இருக்கிறது.
அதையும்
கேட்டு விடுங்களேன்!
பத்மாசுரன்
என்பவன் சிவபெருமானை நோக்கித்
தவமிருந்து ஒரு வரம் வேண்டினான்.
சிவனும்
முன் யோசனையின்றி கேட்ட வரத்தை
தருவதாக வாக்களித்தான்.
' நான்
யார் தலையில் கைவைத்தாலும்
அவன் தலை பஸ்பமாகி விட வேண்டும்'
என்று
வேண்டினான். சிவனும்
அவ்வாறே அளித்தான்.
வரத்தைப்
பெற்ற பத்மாசுரன். சிவன்
தலையிலேயே கையை வைத்துச்
சோதனை செய்து பார்க்க முயன்றான்.
சிவன்
தப்பித்து ஓட, பத்மாசுரன்
விரட்டிக் கொண்டு போனான்.
இந்த
நிலையில் தனது மைத்துனனுக்கு
மோசம் விளைந்ததே எனக்கருதி-
அதிலிருந்து
அவனைக் காப்பாற்ற வேண்டி
விஷ்ணு, மோகினி
உருவெடுத்து எதிரே வந்தான்.
பத்மாசுரன்
மதிமயங்கி மோகினியிடம்
நெருங்கினான். 'இப்படி
வந்தால் இணங்க மாட்டேன்,
குளித்துச்
சுத்தமாக வர வேண்டும்'
என்று
மோகினி கூற, குளிக்கச்
சென்று தன் தலையைத் தேய்த்த
போது, பத்மாசுரன்
தலை எரிந்து பஸ்பமாகி விடுகிறான்.
பிறகு
பயந்து ஒளிந்திருந்த சிவனை
விஷ்ணு அழைத்து நடந்ததைக்
கூறினான். சிவனுக்குச்
சபலம் ஏற்பட்டது. அந்த
மோகினி உருவத்தை மீண்டும்
காட்டச் சொன்னான். விஷ்ணு
மீண்டும் மோகினி உருவெடுத்தான்.
அவ்வளவுதான்!
சிவன்
நிலை குலைந்தான். அவனோடு
கூடினான். வெளிவந்த
இந்திரியத்தைக் கையிலே
பிடித்தான். 'ரிஷிப்பிண்டம்
இராத் தங்காது' என்றபடி,
கையிலே
பிள்ளை பிறந்தது. கையிலே
பிறந்ததால் 'கையப்பன்'
என்றும்
நாளடைவில் 'அய்யப்பன்'
என்றும்
மருவிற்று என்றும் இப்படியொரு
கதை. அரிக்கும்(விஷ்ணு)
அரணுக்கும்(சிவன்)
பிறந்ததால்
'அரிகரப்
புத்திரன்' என்ற
பெயரும் உன்டு என்பர்.
உலகில்
இதுபோல் உண்டா?
முதல்
கதையின் படி கொள்ளைக் கூட்டத்
தலைவன் அய்யப்பன்.
இரண்டாவது
கதையின்படி அசிங்கத்திலும்
ஆபாசத்திலும் பிறந்தவன்
அய்யப்பன். ஆணும்
ஆணுக்கும் கலவி நடந்தது -
பிள்ளை
பிறந்தது என்ற ஆபாசத்தைப்
பக்தியாக்கிய நாடு உலகில்
உண்டா? ஆணும்
ஆணும் சேர்ந்தால் பிள்ளை
பிறக்குமா ? எய்ட்ஸ்
நோய் ஏற்படுமா என்பதைச்
சிந்திப்பீர்!
மகரஜோதி
மோசடி
சபரி
மலை அய்யப்பன் கோயிலில்
'மகரஜோதி'
என்ற
பெயரில் ஓர் ஏமாற்ற நாடகம்
ஆண்டு தோறும் நடத்தப்பட்டு
வருகிறது. அய்யப்பன்
கோயிலுக்கு நேர் எதிரே
இருக்கும் பொன்னம்பலமேடு
எனும் மலை உச்சியில் மகர
விளக்கு தினத்தன்று தீப்பற்றி
எரியும். இதற்கு
'மகரஜோதி'
என்று
பெயர் சூட்டி அய்யப்பன் தனது
சக்தியால் இந்த மகரஜோதியை
உண்டாக்கித் தரிசனம் தருவதாக
நம்பி.