Thursday, August 9, 2012

திரு நீறு ! இந்து மதம் சொல்வது என்ன?



திரு நீறு பூசிக்கொள்வதற்கு புராணம் சொல்லும் கதை என்ன ?


வாதவூர் புராணம் பிரமோத்தா காண்டம் திருநீற்றீன் பெருமையை அடேயப்பா எப்படியெல்லாம் புகழ்ந்து தள்ளுகிறது. அதிக தூர்த்தனாக இருந்த ஒரு பிராமணன் ஒரு இராத்திரி. ஒரு புலை மாதுடன் வியபசாரம்(விபச்சாரம்) பண்ணிக் கொண்டிருக்கையில்,அம்மாதின் கணவன் கண்டு அத்துர்த்தனை வாளினால் வெட்டிக்கொன்று, வேளிக்கப்பால் எறித்தானாம்.

அந்நேரம் பசியால் வருந்தி குப்பைச் சாம்பலில் புரண்டிருந்த ஒரு நாய், அப்பிராமணப் பிணத்தைக்கண்டு அதன் மேல் எறி, மிதித்துக்கொண்டு தசையைக்கடித்து இழுத்துத் தின்றது.நாய் காலிலே ஒட்டிக்கொண்டிருந்த குப்பைச் சாம்பல் பிராமணப் பிணத்தின்மேல் படிந்ததால் சிவ கணங்கள் வந்து உபசரித்து, புட்ப விமானத்தில் ஏற்றுஞ் சமயம், பிராமணனின் தூர்த்த நடத்தைக்காக அவனைத் தண்டிக்க யம தூதர்கள் வந்து சேர, அவர்களை சிவகணங்கள்  விரட்டியத்துத் துரத்திவிட்டு,காமார்த்த பிராமணனை சிவலோகத்தில் கொண்டுபோய்ச் சேர்ந்தார்கள்.’’ – இதுதான்  திருநீற்றீன் மகிமை மாற்றான் மனைவியிடம் தவறாக நடந்து கொண்டவன் அந்தப் பார்ப்பான்.

செத்துப்போன அந்தப் பார்ப்பான் உடலை நாய் கிழித்துத் தின்றதாம். நாயின் கால்களில் ஒட்டிக்கொண்டிருந்த அந்தச் சாம்பல் சாதாரணமானது இல்லையாம் – அது திருநீறாம்.அந்தத் திருநீறு அந்த அயோக்கியனின் உடலில் பட்டால், அவன் செய்த பாவங்கள் தொலைந்து ஓடிப் போய்விட்டதாம்.யம தூதர்கள் நரத்துக்குக்கு கொண்டு போகத்தான் வந்திருப்பார்கள் அவர்களை சிவ கணங்கள் துரத்தியடித்தார்களாம்.

         பஞ்சமா பாவங்களைச் செய்தாலும் பாவமில்லை; பாவங்களைத் தீர்க்க மாட்டுச் சாணியாண சாம்பலை திருநீறையணிந்தால் போதும் என்ற எண்ணம் படிந்த நாட்டிலே ஒழுக்கத்துக்குத் தான் என்ன மரியாதை ?

ஆமாம், இந்த பீடிகை எதற்கு? காரணம் இல்லாமலா ? கொலைக் குற்றத்தின் கீழ் நடமாடிக் கொண்டிருக்கும் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதிக்கு நாடெங்கும் பவள விழாவாம் –ஜெயேந்தியாம் – அக்கிரகாரங்களில் அமோகமாக நடந்து கொண்டிருகிறது.
 
 சென்னை சீறிகிருஷ்ணகான சபாவில் அவருக்கு நடத்தப்பட்ட பவள விழா ஜெயேந்தியில் திருவாய் மலர்ந்துள்ளார். கேளுங்கள், கேளுங்கள் ! 

  நெற்றிக் குறியீடுகளான திருநீறு, திருநாமம் ஆகியவற்றிற்கு நம் தலையெழுத்தை மாற்றும் சக்தி உண்டு என்று உபதேசம் செய்துள்ளார்.(காமகொடி செப்டம்பர் 2010).நெற்றி வழிய சாம்பலை (திருநீறை) ஜெயந்திர சரஸ்வதி அணிவதன் மர்மம் நன்றாகவே புரிகிறது. சங்கரராமனை தீர்த்துக் கட்டினாலும் – அனுராதா ரமணின் மார்பங்களைப் பிடித்தாலும். அந்த பாவங்கள் எல்லாம் அவர் நெற்றித் திருநீற்றின் முன் எம்மாத்திரம் !            
                                                            
  ஒழுக்கக்கேட்டை உரம் போட்டு வளர்ப்பதற்காகவே ஒரு மதம் – பிராயச்சித்தங்கள் – திறுநீறு. கோபி சந்தனம், குங்குமம் !வெக்கக்கேடே உன் பெயர்தான் இந்து மதமா?

        நெற்றிக் குறுக்காக நீளவாட்டத்தில் பிரம்மா படைத்தது எதற்கு தெரியுமா ? இதுபற்றியெல்லாம் இந்த விஞ்ஞான ஆராய்ச்சி ஆசாமிகளுக்கு என்ன தெரியும் ?... தேவர்கள் முதலிய யாவரும் விபூதியைத்தரித்து மோட்சம் அடைய வேண்டும் என்ற கருத்தில் தான் அப்படி படைத்திருக்கிறான். சொல்லுவது சுப்பனோ,  குப்பனோ அல்ல அல்லவே அல்ல! கூர்மபுராணத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது ? ஸ்ருஷ்டா ஸ்ருஸ்டி சாஹர்தி புண்ட ரஸ்யாஸ் த தாம ஸஸர்ஜ சரிலாடம் ஹித்ரியத் கோர்த்துவம் நவர்த்துவம். ததாபி ரவைமூர்க்கா நகுர் வர்தித்ரி  புண்டரகம்.

“அதாவது பிரமா சிருஷ்டி தொடங்கும் போதே விபூதி மகிமை கூற, அதனை அணிந்து உயர்வதகாகவே சர்வ ஜனங்களின் நெற்றிகளையும் குறுக்கே ஆகர்தியாகப் படைத்தனர் – நெடுமையாகவேனும், வட்டமாகவேனும் படைத்திலர். அப்படியிருக்க சிலர் அவ்விபூதி திரிபுண்டா மணியாமல், தீவினை வயப்பட்டு உழலுகிறார்கள் என்று விளங்குவதால் அறியலாம்’’.

ஆக,நெற்றி இப்படி படைக்கப்பட்டுள்ளதே திருநீறு அணிவதற்காம்,சரி,இவர்கள் கூறும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களில் இன்னொரு பிரிவினர் திருநீறு பூசிக் கொள்ளாமல்,நாமம் தீட்டிக் கொள்கிறார்களே – அவர் அவர்கள் எல்லாம் பிரம்மாவின் கட்டளையை நிராகரிக்கக் கூடியவர்கள்தானா ? சிலர் சந்தனம் மட்டும் இட்டுக்கொள்கிறார்களே – அவர்களும் கூர்மப் புராண சங்கதியைக் குப்பைக் கூடையில் தூக்கி எறியக் கூடியவர்கள் தானா ? கிறித்தவர்களும், முசுலிம்களும், பகுத்தறிவாளர்களும் கோலம்,ஓவியம் போட்டுக் கொள்ளாமல் நெற்றியைச் சுத்தமாக வைத்துக்கொண்டு இருக்கிறார்களே – அவர்கள் எல்லாம் பிரம்மாவையே சீட்டுக் கிழிப்பவர்கள்தானா ? இதற்கெல்லாம் எங்கே பதில் சொல்லப் போகிறார்கள் ?

இப்படி எல்லாம் கேள்வி கேட்பார்கள் என்று தெரிந்து தான்  அரிவார்ந்த முறையில் பதில் சொல்ல வக்கில்லாமல், அச்சுறுத்தும் ஒரு வேலையில் இறங்கியிருக்கிறனர். திருநீறு அணியாத திருடகளே என்று விளிக்கப்படுகிறது. விலக்ஷ்ணானந்த சுவாமிகள் என்பார் இதற்காகவே செய்யுட்தொகை ஒன்றையும் எழுதியுள்ளார்.``வாயால், மனத்தால் அறியாத வாணாளாகும் திருநீற்றைப் , பேயே என மனம் பதைத்துப் பிதற்றுகின்ற பேதையரே !‘’ நாயாக, நரியாக வீயாதிருக்கும் திருநீற்றை விதமாய் அணிய வேண்டுவனெ!’’ இப்படியெல்லாம் சாபம் விடுகிறார்கள் இந்தச் சாம்பல் அணியும் பேர்வழிகள் !


(உருவாக்கம் : கு.நீலகண்டன், தி.க. மாணவரணி, சித்தாத்திக்காடு கிளைக்கழகம் பேராவூரணி நகரம்)

வெளியீடு: திராவிடர் கழக இளைஞரணி, பட்டுக்கோட்டை மாவட்டம்.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களை வரவேற்கிறேன்.... அறிவு நாணயத்தோடு கேள்விகளும், கருத்துக்களும் இருக்கவேண்டும்.