இந்து மதத்தின் சமாச்சாரங்கள் அத்துனையும் ஆபாசத்தின் ஊற்றும், பிறப்புமாகும். `ஓம்’ என்பது அந்த அடிப்படையிலேயே அமைந்த ஒன்றாகும். மறைமலை அடிகளார் எழுதிய சைவ சித்தாந்த ஞானபோதகத்தில் சைவ சித்தாந்த நூலாகிய சித்தியாரின் பாட்டை எடுத்துக்காட்டிக் கூறியுள்ளார். ஆண் – பெண் குறி சேர்க்கையினாலேயே இன்பமும் உயிர்களின் தோற்றமும் நிகழ்வதால் ஆண் – பெண் குறி சேர்க்கையே தொன்று தொட்டு சிவலிங்க வடிவாக வணங்கப் பெறலாயிற்று; நீண்ட குவிந்த கால் வடிவு ஆண் அடையாளமாகவும், அக்கல்லைச் சூழ்ந்த வட்டகால் வடிவு பெண் குறியின் அடையாளமாகவும் காணப்படுகிறது என்று கூறப்படுகிறது. இந்து சமயத்தின் ஒரு கிளையாகிய தாந்ராவின்படி ஓம் என்ற பொருளின் பதத்திற்கு விளக்கமும், ஆண் – பெண் குறியின் சேர்க்கையே என்பதாக ஒப்பிடப்பட்டுள்ளது. நீதிமன்றத்திலேயே இந்த உண்மைகள் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளன என்றால், சிலருக்கு ஆச்சரியமாகவும் இருக்கக்கூடும்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் திராவிடர் கழகச் செயலாளர் தோழர் சுப்புரமனியம் ஓம் என்பது குற்றித்த தட்டில் எழுதி, பொதுமக்களின் பார்வைக்கும், சிந்தனைக்குமாக வைத்திருந்தார். (05-06-1990) ஆபாசமானது என்றும் மதநம்பிக்கையாளரின் மனதை புண்படுத்துகிறது என்றும் கூறி அவ்வூர் காவல்துறை வழக்கு ஒன்றைப் பதிவு செய்தது(இந்தியத் தண்டணைச் சட்டம் பிரிவு 298).
பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத்தலைவரும். சீரிய பகுத்தரிவாளருமான பிரபல வழக்கறிஞர் மானமிகு.வை.பாண்டிவளவன் அவர்கள்,கழகத் தோழர் சுப்பிரமணியம் அவர்களுக்காக வாதாடினார். அம்பாசமுத்திரம் நீதித்துறை நடுவர் அ. தேவசகாசம் முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கினை விசாரித்த நீதியரசர் வழக்கை தள்ளுபடி செய்தார் என்பது குறிப்பிடதக்கதாகும்.
திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரைக்கும் எதைப் பேசினாலும் அல்லது எழுதினாலும் ஆதாரத்தின் வலு மிக அதிகமாகவேயிருக்கும். இராமாயணத்தைப் பற்றி தந்தை பெரியார் பொதுக்கூட்டங்களில் பேசும்போது கூட பார்ப்பன ஆசிரியர்களால் மொழி பெயர்க்கப்பட்ட நூல்களை மேசையில் அடுக்கி வைத்தே – அதிலிருந்து பக்கம் உட்பட எடுத்துக் கூறிப் படித்துக் காட்டுவார்.
அடுத்தடுத்த பதிப்புகளில் தந்தை பெரியார் எடுத்துக் காட்டிய பகுதிகளை சாமர்த்தியமாக நீக்கிவிட்டு வெளியிட்டதும் கூட உண்டு. அப்படி நீக்கப்பட்ட பகுதிகளையும், பழைய பதிப்பிலிருந்து ஒப்பிட்டு எடுத்திக்காட்டி, எதிரிகளின் அறிவு நாணயக்கோட்டை அம்பலப்படுத்துவார் பெரியார்.
அருவருப்பு, ஆபாசம் இவை இரண்டுமே இந்து மதத்தின் இரு விழிகள் – இரு கரங்கள் என்பதைப் பக்தர்கள் உள்பட அனைவரும் தெரிந்து கொள்க. ஓம் என்ற இந்த ஆபாச வார்த்தை பொறித்த சங்கலியைக் கழுத்தில் தொங்க விட்டுக் கொள்வதும், கோவில்களில் `ஓம்’ என்பதை வண்ண விளக்குகளால் ஒளிரச் செய்வதும் என்னே மானக்கேடு!
எதற்கு புரட்சி? இன்றுள்ள இழிவுகள் குற்றங்கள் அக்கிரமங்கள் ஒழிவதற்காக.
இவற்றுக்கு இருப்பிடங்கள் யாவை? காரணகர்த்தா யார் என்பதை உணர வேண்டும், உணர்த்தும் அவற்றை அழிப்பதற்கு ஆவண செய்ய வேண்டும்.
மதக்குறி என்பது மாட்டு மந்தைக்காரன் தன் மாடுகளுக்குப் போட்டு அடையாளம் போலவே மதத் தலைவர் தனது மதத்தைப் பின்பற்றுகின்றவர்கள் என்பதைக் காட்ட ஏற்படுத்தப்பட்ட குறியேயாகும்.
**********************************
(உருவாக்கம் : கு.நீலகண்டன், தி.க. மாணவரணி, சித்தாத்திக்காடு கிளைக்கழகம் பேராவூரணி நகரம்)
வெளியீடு: திராவிடர் கழக இளைஞரணி, பட்டுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment
தங்களின் கருத்துக்களை வரவேற்கிறேன்.... அறிவு நாணயத்தோடு கேள்விகளும், கருத்துக்களும் இருக்கவேண்டும்.