Thursday, August 9, 2012

சந்தனம் !!! இதுவா சந்தனம்...


சைவர்கள் நெற்றியில் திருநீறு பூசிக் கொள்கின்றனர்; வைணவர்கள் நெற்றியில் சந்தனமும், நாமமும் தீட்டிக்கொள்கின்றனர். இவற்றிற்கெல்லாம் தத்துவார்த்த முலாம்களைப் பூசுகின்றனர்.கூறும் காரணங்ளை நோக்கும் போது குமட்டிக்கொண்டுதான் வருகிறது. நெற்றியில் சந்தனம் வைத்துக்கொள்வது பற்றி வாசுதேவ உபநிஷத்தில் என்ன கூறப்பட்டுள்ளது? கிருஷ்ணன் கோபிகா ஸ்திரீகளை தழுவிக் கலந்து புண்ர்ந்தபோது. அப்பெண்களின் ஸ்தனங்களிலிருந்தும்(மர்பகம்) கிருஷ்ணன் உடலில் ஒட்டிய பின் அவர்களை கழுவுவதால் வழிந்தோடிய சந்தனமே கோபி சந்தனமே என்று கூறப்படுகிறது.

சுயமரியாதை இயக்கம் நாட்டில் சூறாவளிப் பிரச்சாரத்தை மேற்கொண்டபோது வைதிகர்கள் நடுநடுங்கிப்போனார்கள். திருநீறு, சந்தனம், நாமம் பற்றி புராணங்கள் என்னென்ன கூறுகின்றன என்பதை ஆதாரங்களுடன் புட்டுப் புட்டு வைத்தனர். நாட்டுக்கோட்டை செட்டிமார்கள் பணம் போட்டு இதற்காகவென்றெ பத்திரிக்கை ஒன்றையும் தொடங்கினர்.அதற்கு சிவனேசன் என்று பெயர்.அதன் முதலாவது ஆண்டு 14 ஆவது மலர் அனுபந்தத்தில் கோபி சந்தனம் என்ற பெயரில் எழுதப்பட்டதுதான் மேலே கூறப்பட்ட தகவல் ஆகும்.

பகுத்தறிவுவாதிகள், திராவிடர் கழகத்தினர் இட்டுக்கட்டி எழுதிய கைச் சரக்கல்ல. ஒவ்வொன்றிற்கும் பக்தியில் குளித்து மூழ்கி மஞ்சள் பூசிக்கொண்ட பேர்வழிகளால் எழுதப்பட்ட புராணங்களின் ஆதாரம் கூறினாராம். அமெரிக்காவிலிருந்தபோது விவேகானந்தர் சொன்னதாகக் கூறப்படும் ஒரு கருத்து இன்றளவுக்கும் பலராலும் எடுத்துக்காட்டப்படுகிறது. ஏ! பிராமணர்களே! சர்ப்பம் கடித்துவிட்டால், மந்திரத்தால் அந்த சர்ப்பமேவிஸத்தை இழுக்குமாம் – அதுபோல. நீங்கள் நம் தேசமெல்லாம் கெடுக்கும் வைதீக விஸத்தைப்பரப்பி விட்டீர்கள். நீங்களே இந்த விசத்தை திருப்பி வாங்கிடவேண்டும். உங்கள் வைதிகக்கொடுமையை உங்கள் மதத்தினின்று எடுத்து விட்டீர்களேயானால் உங்கள் மதமே உயர்ந்தது என்று அமெரிக்காவிலிருந்து விவேகானந்தர் கூறினார். 

அமெரிக்காவுக்குச் சென்ற சுவாமி விவேகானந்தர் இந்து மதத்தின் சீலத்தை எடுத்துப்பரப்பினார். சிலம்பம் ஆடினார் என்று கோட்டுவாய் ஒழுக்கபேசும் பார்ப்பணர்கள் விவேகானந்தரின் அறைகூவலை இதுவரை ஏற்றார்கள் இல்லை. வழிபடுவது என்றால் சிவலிங்கத்தை . சிவலிங்கம் என்றால் என்ன என்று கேட்டால். அதற்கொரு லிங்கப்புராணம். தாருகாவனத்து ரிஷிப் பத்தினிப் பெண்களை சிவன் கற்பழித்தானாம்.ரிஷிகள் சாபமிட்டதால் சிவனின் ஆண்குறி அறுந்து வீழ்ந்ததாம்.அதனை தன் குறியால் பார்வதி தாங்கினாராம்.அதுதான் சிவலிங்கமாம் – அதை குப்புற விழுந்து விழுந்து வணங்க வேண்டுமாம்.கேட்டால் அதற்கொரு தத்துவார்த்தம் – ஜீவராசிகளின் உற்பத்தித் தத்துவம் அதற்குள் அடங்கிக்கிடக்கிறதாம். நுரையில் எரிந்து போய் விடும் என்று மாக்ஸ் முல்லர் கூறியது இதனால்தானோ.



**********************************

(உருவாக்கம் : கு.நீலகண்டன், தி.க. மாணவரணி, சித்தாத்திக்காடு கிளைக்கழகம் பேராவூரணி நகரம்)

வெளியீடு: திராவிடர் கழக இளைஞரணி, பட்டுக்கோட்டை மாவட்டம்.



No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களை வரவேற்கிறேன்.... அறிவு நாணயத்தோடு கேள்விகளும், கருத்துக்களும் இருக்கவேண்டும்.