தந்தை
பெரியார் நெறிகள் பத்து
தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் உறுதிமொழி
தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் உறுதிமொழி
1.சாதி
மறுப்புத் திருமணம்,
விதவை
மறுமணம்,
மணவிலக்குப் பெற்றவர்களை மறுவாழ்வுத்
திருமணம் செய்து கொள்வேன். வர(ன்)
தட்சனை
வாங்குவது சுயமரியாதை இழக்கும்
கொத்தடிமை முயற்சி என்னை
நான் ஒரு போதும் விற்க மாட்டேன்
என்று சூளுரைக்கிறேன்.
2.கடவுள்,
மதம்,
சாதி,
சினிமா,
மது,
மருந்து
என்ற பல வகை போதைகளும்,
மூட
நம்பிக்கைகளும் அண்டாத பெரு
நெருப்பாக வாழ்வேன்.
3.சுற்றுச்சூழலை
தூய்மையாக்குவதிலும்,
பொதுச்சொத்துக்களுக்கு
சேதம் ஏற்படாது காக்கும்
பொழுது ஒழுக்கத்தை நிலை
நாட்டவும் என்னையே நான் ஒரு
சமூகக் காவலனாக ஆக்கி கொண்டு
வாழ்வேன்.
4.நல்ல
உடல் நலமே,
நல்ல
உள நலத்திற்கான ஊற்றுக்கண்
என்பதை உணர்ந்து வாழ்வதுடன்
ஊர் நலம்,
உலக
நலம் ஓம்பும் மானுடத்தின்
உண்மைத் தொண்டனாக என்னையே
நான் அர்பணித்துக் கொள்வேன்.
5.கடவுளை
மற மனிதனை நினை என்று அறிவு
ஆசான் வழிப்படி மனித நேய
மாண்பாளனாகவே எனது வாழ்வை
அமைத்து சொல்வதைச் செய்தும்,
செய்வதை
மட்டுமே சொல்வதுமே சுயமரியாதை
சுகவாழ்வு என நான் வாழ்ந்து
காட்டுவேன்.
6.வேலை
கேட்டு விண்ணப்பம் போட்டு
அலுக்காமல்,
வேலை
தரும் நிலைக்கு உயரும் வகையில்
மிகுந்த தன்னம்பிக்கையுடன்
கடும் உழைப்பையே எனது கடமையாக
கருதி வாழ்வேன்.
7.எளிமை,
சிக்கனம்,
பிறபாலரிடம்
பண்புடன் பழகும் பான்மையை
என்றும் வளர்த்துக் கொள்வேன்.
8.பண்பாட்டுப்
படையெடுப்புகளினால் பாழான
எனது இனத்தின் மீட்புக்கான
களப்பணியாளனாக என்றும்
இருப்பேன்.
9.இளமை
என்பது வளமைக்காக என்று
நினைக்காமல் தொண்டுக்காக
அதுவும் சமுதாய தொண்டுக்கான
வாய்ப்பே என்று கருதி என்றும்
உழைப்பேன்.
10.மற்றவர்
உன்னை எப்படி நடத்த வேண்டும்
என்று நீ விரும்புகிறாயோ
அப்படி நீ பிறரிடம் நடந்து
கொள் -
அதுவே
ஒழுக்கம் என்று தந்தை பெரியார்
தம் உயர் ஒழுக்க நெறியாக மனித
நேயப் பண்புடன் என்றும்
சிந்தையில் ஏற்றுச் செயலாற்றி
புதிய உலகினை உருவாக்கும்
தூதுவனாக வாழ்வேன்.
No comments:
Post a Comment
தங்களின் கருத்துக்களை வரவேற்கிறேன்.... அறிவு நாணயத்தோடு கேள்விகளும், கருத்துக்களும் இருக்கவேண்டும்.