- கலி. பூங்குன்றன் -
23.1.2013 சன் தொலைக்காட்சியில் அரங்கேற்றப் பட்ட விவாத மேடை உலகெங்கும் நல்ல அளவு அதிர்வை ஏற் படுத்தியுள்ளது - பாராட்டி ஏராளமான தொலைப்பேசிகள்!
தீப்பொறி பறக்கும் ஒரு பிரச்சினையைச் சரியான நேரத்தில் விவாதத்துக்குத் தேர்வு செய்த நிலையே பாராட்டுக்குரியதுதான்.
2014 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் 15 ஆவது மக் களவைத் தேர்தலுக்கான கவாத்துகள் இப்பொழுதே ஆரம்பித்துவிட்டன.
எதைத் தின்றால் பித்தம் தெளியும்? என்ற வெறி பி.ஜே.பி.யைப் பொறுத்தவரை புரை ஏறிவிட்டது.
கட்சிக்குள்ளும் ஆயிரம் பிரச்சினை. நாடாளுமன்றத் தேர்தலுக்குமுன் மாநிலங்களில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் எதிர்பார்த்த கூட்டல் கணக்கு - கழித்தல் கணக்காகிவிட்டது.
தென்மாநிலங்களில் பி.ஜே.பி.,க்கு என்று முதன்முதலாகக் கிடைத்த கருநாடக மாநிலத்தில் பி.ஜே.பி. ஆட்சி - ஏன்தான் கிடைத்ததோ என்று கிறங்கி மூக்கைச் சிந்தும் அளவுக்கு பி.ஜே.பி.க்குப் பெருந்துயரத்தைக் கொடுத்துவிட்டது.
ராமன் கோவில் கட்டும் பிரச்சினையைத் தொடக் கத்தில் முன்வைத்த பி.ஜே.பி. அடுத்தடுத்த தேர்தல் களில் வாங்கிக் கட்டிக் கொண்ட மரண அடிகள் காரணமாக, உடும்பு வேண்டாம் கை மீண்டால் போதும் என்ற நிலைக்கு நெட்டித் தள்ளப்பட்டுவிட்டது.
உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே இந்துத் தீவிரவாதம்பற்றிப் பேசிவிட்டார் - விடாதே பிடி! என்று கையில் எடுத்துக் கொண்டனர்.
இப்படி சொல்லுகின்றவர்கள் யார் தெரியுமா? ஆயிரக்கணக்கான தொண்டர்களைத் திரட்டிச் சென்று 450 ஆண்டுகால வரலாறு படைத்த பாபர் மசூதியைப் பட்டப் பகலில் பகிரங்கமாக இடித்துத் தரைமட்ட மாக்கியவர்கள்.
இதனை விவாத மேடையில் திராவிடர் கழகத் தலை வரும், திரு.பீட்டர் அல்போன்சும் சுட்டிக்காட்டினார்கள்.
இதற்கு நேரிடையாகப் பதில் சொல்ல சரக்கு இல்லாத சென்னை ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளரான திரு. நம்பி நாராயணன் அவர்கள் நீதிமன்றத்தில் ராமன் கோவில் இருந்ததுபற்றிச் சொல்லவில்லையா என்று திசை திருப்ப முயன்றார்.
பிரச்சினை அதுவல்ல,
பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு அந்த இடத்தி லேயே நின்று, மேற்பார்வை பணியில் ஈடுபட்டவர் யார்? எல்.கே. அத்வானிதானே! இல்லை என்று மறுக்க முடியுமா?
அவருக்குப் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த அஞ்சு குப்தா அய்.பி.எஸ். என்ற அம்மையார் ரேபரேலி சிறப்பு நீதிமன்றத்தில், அத்வானி தூண்டுதல் பேரில்தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது என்று சொல்லி இருக்கிறாரே! (தினமணி, 27.3.2010).
பிசினஸ் இந்தியா என்ற ஏட்டின் செய்தியாளர் ருச்சிரா குப்தாவும் சாட்சி சொல்லியுள்ளார். பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின் அத்வானி எனக்கு ஸ்வீட் கொடுத்தார் என்றும் சொல்லி இருக்கிறாரே!
கரசேவகர்கள் மத்தியில் அத்வானி உணர்ச்சி வெறி யூட்டிப் பேசியதற்கு வீடியோ ஆதாரங்கள் உள்ளனவே!
கரசேவகர்கள் மத்தியில் அத்வானி உணர்ச்சி வெறி யூட்டிப் பேசியதற்கு வீடியோ ஆதாரங்கள் உள்ளனவே!
இப்படிப்பட்டவர்களை இந்துத் தீவிரவாதிகள் என்று அழைக்காமல், இந்தியாவின் சுவீகாரப் புத்திரர்கள் என்றா உச்சி மோந்து தாலாட்டவேண்டும்?
இந்த விவாதத்தினூடே காந்தியாரைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ்.காரர் நாதுராம் கோட்சேபற்றியும் பிரச் சினை சூடாக வெடித்தது.
இதனை இசகு - பிசகாக எடுத்துக் கொடுத்தவர் தோழர் நம்பி நாராயணன். காந்தியாரின் கொள்கையைக் கொலை செய்கிறவர்கள் காங்கிரஸ்காரர்கள் என்று சொன்னாரே பார்க்கலாம்.
காந்தியாரைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சேயின் ஆர்.எஸ்.எஸைச் சேர்ந்தவர் களா காந்தியாரின் கொள்கை யைப்பற்றிப் பேசுவது என்று ஒரு போடு போட்டார் திரு. பீட்டர் அல்போன்ஸ்.
உடனே காணொளிக் காட்சிமூலம் திரு. எச். ராஜா மூக்கை நுழைத்தார் - அவர் கள் வழக்கமாகக் குழப்பும் - மறுப்பை வெளிப்படுத்தினார் - கோட்சே ஆர்.எஸ்.எஸ் அல்ல - நீதிமன்றமே சொல்லி இருக்கிறது என்று குறுக்குச் சால் ஓட்டினார்.
காந்தியாரைப் படுகொலை செய்வதற்கு முன்பாக ஆர்.எஸ்.எசுக்குப் பிரச்சினை வந்துவிடக் கூடாது என்பதற்காகச் செய்துகொள்ளப்பட்ட தந்திரம் அது.
ஆர்.எஸ்.எஸைப் பொறுத்தவரையில் உறுப்பினர் - உறுப்பினர் அட்டை என்றெல்லாம் வைத்துக் கொள் வதில்லை - காரணம் இதுபோன்ற பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளவே!
மிகச் சரியாக தமிழர் தலைவர் அவருக்கே உரித்தான முறையில் பளிச்சென்று நீதிமன்றம் சொல்லுவது இருக்கட்டும்,
நாதுராம் கோட்சேயின் தம்பி கோபால் கோட்சே என்ன சொன்னார் என்பதுதான் முக்கியம்.
என் அண்ணன் நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ். காரர்தான். அதனை ஏன் மறைக்கவேண்டும்? அப்படிச் சொல்லுபவர்கள் கடைந்தெடுத்த கோழைகள் என்று சொன்னதை வாள் வீச்சென பட்டுத் தெறித்ததுபோல வில்லிலிருந்து புறப்பட்ட கணைபோல கழகத் தலைவர் எடுத்து வீசியதற்குப் பிறகுதான் அடங்கினார்கள்.
இன்னும் இது தொடர்பாக ஆயிரம் ஆயிரம் தகவல்கள் உண்டு. தூக்கிலிடப்பட்ட கோட்சேயின் அஸ்தியை இன்னமும் பத்திரமாகப் பாதுகாத்துக் கலசத்தில் வைத்துள்ளனர்.
பிரிந்துபோன பாகிஸ்தான் பகுதிகள் எல்லாம் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட பின்னர் பாகிஸ்தானில் பாயும் சிந்து நதியில் அந்த அஸ்தியைக் கரைக்கப் போகிறார்களாம்.
ஆண்டுதோறும் கோட்சே தூக்கிலிடப்பட்ட நாளில் கோட்சே அஸ்தியிருக்கும் கலசத்தை வைத்து வீர வணக்கமும், மரியாதையும் செய்பவர்கள் ஆர்.எஸ்.எஸ். காரர்கள்தானே!
மத்தியில் பி.ஜே.பி. ஆட்சியில் இருந்தபோது மை நாதுராம் கோட்சே போல்தே! என்ற பெயரில் நாடகத்தை டில்லியிலும், மும்பையிலும் நடத்தியவர்கள் யார்?
ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்தானே! நான்தான் கோட்சே பேசுகிறேன் என்ற பெயரில் நடத்தப்படும் அந்த நாடகத்தின் கருப்பொருள் என்ன?
கோட்சே கடவுள் அவதாரமாம் - காந்தியார் என்பவர் அரக்கனாம்!
இன்னும் ஒரு சூழ்ச்சியைக் கேளுங்கள்! கேளுங்கள்!! நாதுராம் கோட்சே தன் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டிருந்த தும் - சுன்னத் செய்து கொண்டிருந்ததும் எதைக் காட்டுகின்றன?
ஆர்.எஸ்.எஸ். பார்ப் பான் கொன்றுவிட்டு பழியை முசுலிம்மீது போட்டு மதக் கலவரத்தை உண்டாக்க வேண்டும் என்பதுதானே அவர் களின் திரைமறைவு சதித் திட்டம். அந்தச் சதியை முறியடித்தது தந்தை பெரியார் அவர்களின் வானொலி உரைதானே!
சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறிய இந்துத் தீவிர வாதம் என்ற சொல்லைப் பிடித்துக்கொண்டு, அதன்மூலம் இந்து வாக்கு வங்கியைத் தன் பக்கம் ஈர்த்துக் கொள்ளலாம் என்பது அவர்களின் உள்ளக்கிடக்கை.
இந்தியா ஒன்றும் குஜராத் அல்ல. மோடியைப்பற்றி குஜராத்துக்குள் எப்படி இருந்தாலும் இந்தியா முழுமையும் வேறு வகையான கண்ணோட்டம்தான்.
ஒரு தாய்மக்களாக வாழ வேண்டியவர்களுள் மத வாதத்தைத் திணித்து சிறுபான்மை மக்களைக் கொன்று குவிக்கும் கொடியவர்கள் இவர்கள்.
மோடி பிரதமரானால் குஜராத்தில் நடந்த படுகொலை இந்தியா முழுமையுமே அரங்கேற்றப்படும்! அது அரச பயங்கரவாதமாக இருக்கும் என்பது பெரும்பான்மையான மக்கள் உணரவே செய்வார்கள்.
இந்தியாவின் மதச் சார்பின்மைக்கு மரணக் குழி வெட்டக் கூடியவர்கள் இவர்கள் என்பதையும் இந்தியா அறியும்.
இந்தியாவில் வாழும் முசுலிம்கள், கிறிஸ்தவர்கள் வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள் அல்லர் - ஆரியர்கள்போல.
ஆர்.எஸ்.எஸின் பிதாமகர்களில் ஒருவரான தேவரஸ் என்ன சொல்லுகிறார்?
நமது நாட்டிலுள்ள முஸ்லிம்கள் ஈரானிலிருந்தோ, துருக்கியிலிருந்தோ வந்தவர்கள் அல்லர். இதைத்தான் நாம் சொல்லுகிறோம். இந்த நாட்டுக் கிறிஸ்தவர்கள் இங்கிலாந்திலிருந்தோ, பிரான்சிலிருந்தோ வந்தவர்கள் அல்லர். இந்துக்களைப் போல அவர்களும் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்தான். நம் அனைவருடைய மூதாதையர் களும் ஒன்றுதான். ஒரே ரத்தம் நம் அனை வருடைய உடல்களிலும் பாய்கிறது. இங்குள்ள கிறிஸ்த வர்களும், முஸ்லிம்களும், நமது நாட்டு வழிபாட்டு முறையை மாற்றிக் கொண்டிருக்கலாம், ஆனால், அவர்களுடைய பண்பாடும், தேசியமும் மாறவில்லை. கலாச்சார ரீதியாக அவர்களும் இந்துக்கள்தான். (நூல் தேசிய நோக்கு பக்கம் 15- தேவரஸ்)
ஆர்.எஸ்.எஸ்.பற்றி என்று கேள்வி - பதில் வடிவில் தமிழர் தலைவர் எழுதி, திராவிடர் கழகத்தால் வெளியிடப்பட்ட நூலிலும் இது எடுத்தாளப்பட்டுள்ளது.
உண்மை இவ்வாறு இருக்கும்போது, முசுலிம்களை யும், கிறிஸ்தவர்களையும் அந்நியர்களாகக் கருதுவது எப்படி? எந்த அடிப்படையில்?
இந்து மதம் போலவே இந்துத்துவா கூட்டத்தின் கருத்தும், சிந்தனைகளும் குழப்ப முட்டையில் வெளிவந்த குஞ்சுகள்; முரண்பாடு எனும் முட்டையில் சூம்பிப் போன கருச் சிதைவுகள்!
ஆனாலும், விஷமிகள் விஷயத்தில் விழிப்பாகவே இருக்கவேண்டும். இருவேறு பிரிவினரிடையே கலவர விதையைத் தூவி விடுவர்; ஜாதிக் கலவரத்திற்குக் கொம்பு சீவி விடுவார்கள்.
கோவில் திருவிழா என்று கூறி அதற்குள் புகுந்து மித்திர பேத சித்து விளையாட்டுகளில் ஈடுபடுவார்கள்.
தங்களுக்குத் தாங்களே தீ வைத்துக்கொண்டு பழியை மற்றவர்கள்மீது போடுவார்கள். எச்சரிக்கை யாக பொதுமக்களும் இருக்கவேண்டும் - அரசுகளும் இருக்கவேண்டும்.
கடைசியாக மத்திய அரசுக்கு ஒரு கேள்வி. பாபர் மசூதியை இடித்து 20 ஆண்டுகள் கழிந்துவிட்டன. வாஜ்பேயி உள்பட 68 பேர்கள் பாபர் மசூதி இடிப்புக் குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என்று நீதிபதி லிபரான் அறிக்கை திட்டவட்டமாகக் கூறிவிட்டது. சட்டத்தின்முன் அனைவரும் சமம்தான்.
வழக்கை விரைவுபடுத்தி, குற்றவாளிகளைக் கூண் டோடு சிறைக் கொட்டடியில் சட்டப்படி தள்ளினால் நாட்டுக்கும் நல்லது - அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக் கும் நல்லது.
இதுபோன்ற வாய்ப்பு பி.ஜே.பி.,க்குக் கிடைத் திருந்தால், அதனை எவ்வளவு இலாவகமாகப் பயன்படுத்திக் கொண்டு இருப்பார்கள்?
குற்றவாளிகள் கொலுவில் ஏறத் தோள் கொடுக்கா தீர்கள்! அப்படி கொடுத்தால் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி - செயல் விவேகம் அற்ற ஆட்சி என்ற குற்றச்சாற்றுக்கு ஆளாக நேரிடும் - எச்சரிக்கை!
சுருக்கமாகச் சொன்னால் விவாத மேடை உலகெங்கும் சூரிய ஒளியை வீசியிருக்கிறது என்று கொள்ளலாம் - சொல்லலாம்!
No comments:
Post a Comment
தங்களின் கருத்துக்களை வரவேற்கிறேன்.... அறிவு நாணயத்தோடு கேள்விகளும், கருத்துக்களும் இருக்கவேண்டும்.