தந்தை பெரியார் 134-ஆம் ஆண்டு பிறந்தநாள் (17.09.2012) முதல் உலகமெங்கும் ஆப்பிள் கருவிகளில் 'விடுதலை' நாளிதழ்.
மதவாதிகள் அறிவியல் கண்டுபிடிப்புகளை மக்களிடம் தன் மதம் தொடர்பான செய்திகளை கொண்டு செல்ல பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்.
அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை அது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உதாரணமாக.
தொலைக்காட்சிகளில், இந்து மத சாமியார்கள் தனி தொலைக்காட்சி அலைவரிசை வைத்திருக்கின்றனர்., அது மட்டுமில்லாமல் காலை 11 மணி வரையில் வெவ்வேறு நேரங்களில் ராசி பலன் சொல்வது, ஆலய தரிசனம், முட்டாள்களின் உளரலான பகவத் கீதையினை படித்து சொல்வது , ( வெளக்கம் சொல்ற அளவுக்கு அதுல அப்படி என்ன கருமம் இருக்கோ தெரியவில்லை, ), ஏதாவது ஒரு கோவிலை எடுத்துக்கொண்டு அதற்கான தல புராணம் சொல்வது இது போன்று பல கொடுமையான, முட்டாள்தனமான நிகழ்ச்சிகள்.
இதுதான் இப்படியென்றால் நட்சத்திரக் கல் , பாதம் , மந்திரக் கல் இதுபோன்ற பொருட்களை வாங்குங்கள் என்று வேறு ஒரு மணி நேரத்திற்கு குறையாமல் விளம்பரம் தனியாக வேறு.
வானொலியினை எடுத்துக்கொண்டால் காலையில் பக்திப் பாடல்.
நாளிதழ்களை எடுத்துக்கொண்டால் தினசரி ராசிபலன், ஆன்மிக மலர், பக்தி மலர், தெய்வீக மலர் என தனித்தனி இணைப்புகள்.
கணினியினை எடுத்துக்கொண்டால் , கணினி எப்படியொரு அற்புதமான தொரு கண்டுபிடிப்பு அதையும் ஜாதகம் பார்க்க பயன்படுத்துவது அதற்கென தனி மென்பொருள் வேறு.
இணையத்தை எடுத்துக்கொண்டால் சொல்லவே வேண்டாம் பக்தி, மதம் தொடர்பான கடைச்சரக்குகளை நன்றாகவே வேகவைத்து அரும்பாடு பட்டு விற்றுக்கொண்டிருக்கின்றனர். அப்படி விற்ற ஒரு செய்திதான் சனிபெயர்ச்சி அன்று செயற்கைகோள்களெல்லாம் ஸ்தம்பித்து நின்றது என்ற செய்தி. இன்னும் பல...
அச்சு இயந்திரங்களை எடுத்துக்கொண்டால் பஞ்சாங்கம், ஆன்மிக மலர், தின மலர் போன்ற அனைத்தையும் அச்சடிக்க பயன்படுத்துகின்றனர்.
இதுபோல சொல்லிக்கொண்டே போகலாம்...
இப்படியிருக்கும் இந்த சூழ்நிலையில் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தினால் 'விடுதலை' நாளிதழ் ஆப்பிள் கருவிகளில் பயன்படுத்தும் வண்ணம் மென்பொருள் உருவாக்கி வெளியிடப்பட்டுள்ளது. மிகவும் மகிழ்ச்சியடைய வேண்டிய ஒரு செய்தி.
கைப்பேசி பயன்படுத்தும் அனைவரும் 'News Hunt' என்ற ஒரு மென்பொருளை நாளிதழ்கள் படிக்க பயன்படுத்துவோம். அதில் இருக்கும் தமிழ் நாளிதழ்கள் இரண்டுமே பார்ப்பன நாளிதழ்கள் (தினமணி(இனமணி), தினமலர் (தினமலம்)). ஆங்கில நாளிதழ்களும் பார்ப்பன நாளிதழ்கள்தான் (The Hindu, Indian Express).
ஆகையால்,
Nokia, Android, போன்ற கருவிகளில் பயன்படுத்தும் வண்ணம் .jar மற்றும் .Android App மென்பொருளாகவும் வெளியிட்டால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்.
அறிவியல் கண்டுபிடிப்புகளையும், கருவிகளையும் மனித சமுதாய முன்னேற்றத்திற்கு பயன்படுத்தாத எந்த நாடும் முன்னேறியதாக வரலாறு இல்லை. ஆகையால் அறிவியல கண்டுபிடிப்புகளை, கருவிகளை முன்னேற்றத்திற்கும் அறிவு வளர்ச்சிக்கும் பயன்படுத்துவோம்.
வதந்திகளைப் பரப்புவது, மதச்சண்டைகளை உருவாக்கும் விதத்தில் குறுஞ்செய்திகள் அனுப்புவது போன்ற செயல்களைத் தவிர்ப்போம்.
**********************************
வாழ்க பெரியார் ! வளர்க பகுத்தறிவு !! உலகமயமாகட்டும் பெரியாரின் கொள்கை !!!
வாழ்க பெரியாரினை உலகமயமாக்கிய தலைவர் ஆசிரியர் வீரமணி
**********************************


No comments:
Post a Comment
தங்களின் கருத்துக்களை வரவேற்கிறேன்.... அறிவு நாணயத்தோடு கேள்விகளும், கருத்துக்களும் இருக்கவேண்டும்.