உலகத்தின் மிகப்பழமையான இரண்டு சுரண்டல் தொழில்களான மதம், அரசியல் என்ற இரண்டிலும் சுரண்டல் தளபதிகளான மதவாதிகளும் அரசியல் வாதிகளும் இளைஞர்களுக்கு வலைவிரித்து பசப்பு மொழிகளால் பாச வார்த்தைகளால் பொய்யை அதிகாரப்பூர்வமாக பரப்பி மனித சமூகத்தை பாழ்படுத்தி வரும் இவ்விரண்டு தொழிகளும் சில மகத்தான பொய்யர்களை தலைவர்களாகப் பெற்று இன்று இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கின்றனர்.
கொடிதூக்கு, கொள்கைப் பரப்பு, என்னைத் தலைவனாக்கு கிறித்தவனை அழி, முஸ்லீமை வெட்டு என்னை மடாதிப்பதியாக்கு ஜகத்குருவாக்கு என்று சொலிறார்கள். சக மனிதர்களைக் கொன்று குவித்து அந்த பிண மேடையில் இவர்கள் கோலோச்ச இளைஞர்கள் தோள் கொடுக்க துணைநிற்க, போராட கொள்கைப் பரப்ப வேண்டுமாம்,
நீங்கள் சிந்தியுங்கள் என்று எவன் சொல்லவில்லையோ அவன் அயோக்கியன்.
அறிவுக்கு பணிய்யாற்றுங்கள் என்று எவன் வாதிடவில்லையோ அவன் திருடன்.
மனித இன மேம்பாட்டிற்கு பாடுபடுங்கள் என்று எவன் அழைக்கவில்லையோ அவன் துரோகி.
இளமை துடிப்பை செயல் வேகத்தை மதவாதியின் காலடியில் சமர்பிப்பதைவிட, அரசியல் வாதியின் பித்தலாட்டங்களுக்கு பலியிடுவதைவிட அறிவு பணிக்கு அற்பணிக்க வாருங்கள்.
தோழர்களே இளைஞர்களே, புரட்சிகர மாணவர்களே....என்று நாங்கள் அழைக்காமல்
சாந்தி செய், சடங்கு செய், யாத்திரை செய் , பூஜை செய், பிரார்த்தனை செய், பார்ப்பானுக்கு தானம் செய் என்று கூறுபவர்களா இதைச் செய்வார்கள்......?
சாந்தி செய், சடங்கு செய், யாத்திரை செய் , பூஜை செய், பிரார்த்தனை செய், பார்ப்பானுக்கு தானம் செய் என்று கூறுபவர்களா இதைச் செய்வார்கள்......?
No comments:
Post a Comment
தங்களின் கருத்துக்களை வரவேற்கிறேன்.... அறிவு நாணயத்தோடு கேள்விகளும், கருத்துக்களும் இருக்கவேண்டும்.